விநாயகர் சதுர்த்தி வின்னர் யாரு?.. சர்தார் 2 vs மண்டாடி.. பாக்ஸ் ஆபீஸில் கார்த்தியின் நிலைமை என்ன?
சென்னை: சர்தார் படத்துக்குப் பிறகு கார்த்தி சோலோவாக நடித்த எந்தவொரு படமும் பெரிதாக ஓடவில்லை. சர்தார் படமே படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கே பெரிதாக பிடிக்கவில்லை என அவரே கூறியிருந்தார். ஆனால், சர்தார் 2 படத்தை பாராட்டி பக்கம் பக்கமாக பேசிய பி.எஸ். மித்ரன் போஸ்ட் ரிலீஸுக்குப் பிறகு ஆளையே காணோம்.
மாறாக சூரியின் மண்டாடி திரைப்படம் திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை வந்த நிலையில், ஷார்ப்பாக கணக்குப் போட்டு வியாழக்கிழமையே 2 படங்களும் வெளியாகின.
5 நாட்கள் தொடர்ந்து 2 படங்களும் ஓடிய நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வின்னர் யார் என்பது குறித்து இங்கே பார்த்து விடுவோம் வாங்க..
மண்டாடி உலக வசூல்: மதிமாறன் இயக்கத்தில் சூரி, சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் நடித்த மண்டாடி திரைப்படம் ஏகப்பட்ட ரியல் ஸ்டன்ட் காட்சிகள் மற்றும் புதிய கதையாக பாய்மரப்படகு போட்டியை திரையரங்குகளில் காட்டி இயக்குநர் வியக்க வைத்து விட்டார். சூரி காமெடியன் எல்லாம் இனிமே கிடையாது. கோட்டை எல்லாம் அழிங்க நான் ஃபர்ஸ்ட்ல இருந்து வரேன் என விடுதலை, விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி என நடிப்பு அரக்கனாகவே மாறி மண்டாடி படத்தில் நாயகனாக உயர்ந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை வெளியான மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் சுமார் 62.8 கோடி வசூலை கடந்துள்ளதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. மண்டாடி படத்தின் பட்ஜெட் சுமார் 70 முதல் 80 கோடி என கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், எளிதில், 100 கோடி வசூலை இந்த வார இறுதிக்குள் மண்டாடி கடந்து வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்தார் 2 உலக வசூல்: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியான சர்தார் 2 படத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன், எஸ்.ஜே. சூர்யா, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, நிழல்கள் ரவி, அச்சுத் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்பை த்ரில்லர் படமாக 125 கோடி பட்ஜெட்டில் உருவான சர்தார் 2 திரைப்படம் 19.85 கோடி வசூலை மட்டுமே இதுவரை 5 நாட்களில் உலகளவில் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி வின்னர் சூரி: இந்த ஆண்டு சூர்யாவை தொடர்ந்து சூரிக்கு சுக்கிர திசை அடித்துள்ளது. கவின், கார்த்தி படங்கள் எல்லாம் சுமாரான வசூல் வேட்டையையே பாக்ஸ் ஆபீஸில் நடத்தி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு கார்த்திக்கு இன்னமும் வசூல் வேட்டை நடத்தும் படங்கள் அமையவில்லை. ஜப்பான், மெய்யழகன், வா வாத்தியார், சர்தார் 2 என சறுக்கிக் கொண்டே போகிறார். தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் மார்ஷல் திரைப்படம் கார்த்திக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.