📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 03, 2026 03:04 PM

விமானப் பசுமை எரிபொருள் வரி அடுத்த ஆண்டு நடப்புக்கு வருகிறது

விமானப் பசுமை எரிபொருள் வரி அடுத்த ஆண்டு நடப்புக்கு வருகிறது

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகள் விமானப் பசுமை எரிபொருள் வரியை அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாண்டு அக்டோபர் 1 முதல் வாங்கும் பயணச்சீட்டுகளுக்கு இந்த வரி பொருந்தும்.

இருப்பினும், விமானச் சரக்குப் போக்குவரத்திற்கான இந்த வரி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2028 ஜனவரி 1 முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களுக்கு வரி விதிக்கப்படும். அதற்காக அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் விற்கப்படும் சேவைகளுக்கு இது பொருந்தும்.

பயணிகள் விமானங்களுடன் ஒப்பிடும்போது விமானச் சரக்குப் போக்குவரத்து மாறுபட்டது என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது. அத்துடன் அதில் ஈடுபட்டுள்ள வணிகங்கள், அமைப்புகளின் எண்ணிக்கை காரணமாகவும் சரக்குக் கட்டண வரி ஒத்திவைக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.

“தொழில்துறையின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு, இந்த ஓராண்டு ஒத்திவைப்பானது, புறப்படும் விமானங்களில் சரக்குப் போக்குவரத்திற்கான வலுவான, நிலையான விமான எரிபொருள் வரி வசூல் முறையை உருவாக்கிச் செயல்படுத்துவதற்குத் தொழில்துறையுடன் இணைந்து பணியாற்ற ஆணையத்துக்குக் கூடுதல் நேரத்தை வழங்கும்,” என்று அது குறிப்பிட்டது.

எஸ்ஏஏஏ@சிங்கப்பூர் அமைப்பின் (முன்னாள் சிங்கப்பூர் விமானச் சரக்கு முகவர் சங்கம்) தலைவர் கேப்ரியல் லாம் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். வரிகளை வசூலிக்கும்போது தொழில்துறையில் ‘அனைவருக்கும் ஒரே மாதிரியான’ அணுகுமுறையைப் பின்பற்ற முயல்வது முரண்பாடுகளை உருவாக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

நடைமுறைப்படுத்துவதற்கான காலத்தை நீட்டிப்பதன் மூலம், தொழில்துறை பங்குதாரர்கள் இந்த மாற்றத்தை மேலும் சீராகக் கையாள முடியும் என்றார் திரு லாம்.

விமான எரிபொருள் பசுமை வரியை வரும் அக்டோபர் மாதம் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகளிடம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இவ்வாண்டு ஏப்ரல் 1 முதல் வாங்கப்படும் பயணச்சீட்டுகளுக்கு அது பொருந்தும் என்றும் முன்னர் கூறப்பட்டிருந்தது.

இப்போது எரிபொருள் பசுமை வரி வசூலிப்பது அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் போரால் உலக அளவில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியே இதற்குக் காரணம்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பயணத் தொலைவு, பதிவு செய்யப்படும் வகுப்பைப் பொறுத்து இந்த வரி $1 முதல் $41.60 வரை இருக்கும்.