📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 03, 2026 01:04 PM

வெனிசுவேலா நிலநடுக்கம்; சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் $100,000 உதவி

வெனிசுவேலா நிலநடுக்கம்; சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் $100,000 உதவி

வெனிசுவேலாவை நிலநடுக்கங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து எடுக்கப்படும் மீட்பு, நிவாரணப் பணிகளுக்குக் கைகொடுக்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 100,000 வெள்ளி மதிப்பிலான உதவி வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (ஜூன் 24) வெனிசுவேலாவை இரண்டு நிலநடுக்கங்கள் உலுக்கின. வெனிசுவேலா செஞ்சிலுவைச் சங்கம், செம்பிறை இயக்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 100,000 வெள்ளி மதிப்பிலான உதவி கைகொடுக்கும்.

தேடல் மற்றும் மீட்புப் பணிகள், அவசர மருத்துவப் பராமரிப்புச் சேவைகள், ஆக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் மனிதாபிமானத் தேவைகளை விரைவில் அடையாளம் காண எடுக்கப்படும் முயற்சிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ நிதி அளிக்குமாறு பொதுமக்களை ஊக்குவிக்கும் முயற்சியையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் எடுத்துவருகிறது.

‘குடும்பத் தொடர்புகளை மீட்டெடுத்தல்’ (ஆர்எஃப்எல்) எனப்படும் சேவையையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் செயல்படுத்தியிருக்கிறது. பேரிடரால் பிரிந்துபோன குடும்பத்தினரை ஒன்றிணைக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆதரவு தேவைப்படுவோர் rfl@redcross.sg எனும் இணைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

வங்கிக் கடன் அட்டை, பேநவ், காசோலை போன்ற வழிகளின் மூலம் பொதுமக்கள் நன்கொடை அளிக்கலாம்.