📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 17, 2026 01:33 PM

வைபவ் சூர்யவன்ஷி கடவுள் தந்த பரிசு.. ஸ்ரேயாஸ் தலைமையிலான அணி அபாயகரமாக உள்ளது

வைபவ் சூர்யவன்ஷி கடவுள் தந்த பரிசு.. ஸ்ரேயாஸ் தலைமையிலான அணி அபாயகரமாக உள்ளது

வைபவ் சூர்யவன்ஷி கடவுள் தந்த பரிசு.. ஸ்ரேயாஸ் தலைமையிலான அணி அபாயகரமாக உள்ளது- ரஷித் கான் பாராட்டு

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி பல முக்கிய பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது என்று ரஷித் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பேட்டிங் செய்யும்போது பவர்பிளே ஓவர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் எந்தவொரு சூழ்நிலையிலும், எந்தவொரு பந்துவீச்சாளருக்கு எதிராகவும் பெரிய ஸ்கோரை எவ்வாறு எட்டுவது என்பதை இளைய வீரர்கள் கற்றுக்கொள்ள இந்தத் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

'டெல்லி போன்ற மைதானங்களில் பெரிய ஸ்கோர்களை அடிக்கக்கூடிய மனநிலையை வளர்த்துக்கொள்வது மிக முக்கியம் என்றும், பந்துவீச்சில் பவர்பிளேயில் எதிரணியை கட்டுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பவர்பிளேயில் 70-80 ரன்களைக் கொடுத்துவிட்டால், பின்னர் 200 அல்லது 230 ரன்களைப் பாதுகாப்பது கடினமாகிவிடும் என்பதால், இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான தற்போதைய இந்திய டி20 அணி மிகவும் அபாயகரமான ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று ரஷித் கான் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர்,"இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக அபிஷேக் சர்மா விளங்குவார் என்று ரஷித் கணித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அவருடன் பயணித்த நினைவுகளைப் பகிர்ந்த ரஷித், பேட்டிங் மட்டுமின்றி மிடில் ஓவர்களில் பந்துவீசக்கூடிய திறமையும் அபிஷேக்கிடம் உள்ளது என்றும், அவர் இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுப்பார் என்றும் கூறினார்.

அதேபோல், 15 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த வைபவ் சூர்யவன்ஷி குறித்துப் பேசிய அவர், "வைபவின் அச்சமற்ற ஆட்டமும், சிறந்த ஷாட் தேர்வும் அவரைத் தனித்துவமாகக் காட்டுகின்றன. மிக இளம் வயதிலேயே பந்துவீச்சாளர்களின் உத்திகளைப் புரிந்து விளையாடும் முதிர்ச்சி அவரிடம் உள்ளது. அவருடைய பவர் மற்றும் hand-eye coordination கடவுள் கொடுத்த பரிசு. தனது இளம் வயதில் தமக்கு அந்த அளவுக்கு சிக்ஸர்கள் அடிக்கும் திறன் இருந்ததில்லை."

"2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராகப் பெற்ற வெற்றிகள் அந்த நம்பிக்கையை விதைத்தன. தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றதன் மூலம், தங்களால் உலகத்தரம் வாய்ந்த அணிகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை முழுமையாக உருவானது."

தற்போது டி20 அணியை வழிநடத்தும் இப்ராஹிம் சத்ரான் குறித்துப் பேசிய ரஷித், "அவர் கடின உழைப்பாளி மற்றும் அணியை முன்னின்று வழிநடத்தக்கூடியவர். ஒரு மூந்த வீரராக அவருக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குகிறேன், கேப்டனாக எல்லாவற்றையும் தன் தலைமேல் போட்டுக்கொள்ளாமல், செயல்முறையில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதை அனுபவபூர்வமாக அவருக்குக் கற்றுக்கொடுத்தேன்" என்று ரஷித் கூறினார்.

"ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையை வெல்வதே எனது ஒரே லட்சியம். 2024 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றும் எங்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. நான் விளையாடும் காலத்திற்குள் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு உலகக் கோப்பையை பெற்றுத் தருவதே எனது இறுதி இலக்கு" என்று ரஷித் கான் கூறினார்.