📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 14, 2026 10:03 PM

TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50

TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50

TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி

TN Govt Rice: விலைவாசி உயர்வுக்கு மத்தியில் சன்னரக அரிசியை கிலோ 50 ரூபாய் என கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்ய, தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Govt Rice: சன்னரக அரிசியின் விலை கிலோவிற்கு 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கிடுகிடு விலையேற்றம்:

கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக விலையேற்றம் கண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பருவகாலை மழை பொய்த்து போய் உற்பத்தி பாதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அதிகப்படியான நகரமயமாதல் ஆகிய காரணங்களால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தான் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் சன்னரக அரிசியை கிலோ 50 ரூபாய் என கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்ய, தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரிசி வரத்து குறைவு - விலை உயர்வு

தமிழ்நாட்டில் பருவமழை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், அரிசி உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது. குறுவை சாகுபடியும் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் பெரிய அளவிலான விளைச்சல் இல்லாத சூழல் நிலவுகிறது. இதேபோன்று தமிழ்நாட்டிற்கு வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்யும் மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் நமது மாநிலத்திற்கான அரிசி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆகஸ்டில் கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சன்னரக அரிசி தற்போது அதிகபட்சமாக 20 ரூபாய் வரை உயர்ந்து ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 25 கிலோ அரிசி மூட்டையின் விலை தற்போது ஆயிரத்து 750 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கவலை - அரசு ஆலோசனை:

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தலைமையில் அண்மையில் விலை கண்காணிப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தலைமை செயலாளர் சாய்குமார், உணவுத்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்

50 ரூபாய்க்கு சன்னரக அரிசி?

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்திய உணவு கழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சன்னரக அரிசியை வாங்கி, கூட்டுறவு அங்காடிகளில் கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறதாம். இதற்காக எந்தெந்த மாநிலங்களில் அரிசி கிடைக்கும், எவ்வளவு கொள்முதல் செய்யமுடியும் என்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றனவாம். ஒருவேளை ஒரு லட்சம் டன் அரிசி கிடைப்பது உறுதி செய்யப்பட்டால், கூட்டுறவு கடைகள் வாயிலாக குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்வது உறுதி செய்யப்படும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி