📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 06, 2026 07:04 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்

டிஎன்பிஎஸ்சி குரூப்

இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கும் சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 அறிவிப்பில் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குரூப்-4 தேர்வு

குரூப்-4 தேர்​வில், இளநிலை உதவி​யாளர், தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர் (கிரேடு-3), கிராம நிர்​வாக அலு​வலர், வரை​வாளர், பில் கலெக்​டர், வனக்​காவலர் உள்​ளிட்ட பதவி​கள் இடம்​பெறும். எஸ்​எஸ்​எல்சி தகுதி: குரூப்-4 தேர்வை பொருத்​தவரை​யில் பெரும்​பாலான பதவி​களுக்கு அடிப்​படை கல்​வித்​தகுதி எஸ்​எஸ்​எல்சி தேர்ச்சி ஆகும்.

கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்படுமா?

குரூப்-4 தேர்​வுக்கான அடிப்படை கல்​வித்​தகுதி எஸ்.எஸ்.எல்.சி என்றாலும் முதுகலை பட்​ட​தா​ரி​களும், பட்​ட​தா​ரி​களும்தான் அதிக எண்​ணிக்​கையில் விண்​ணப்​பிக்​கி​றார்கள் . கடந்த குரூப்-4 தேர்​வுக்கு 13.89 லட்சம் பேர் விண்​ணப்​பித்​திருந்​தனர். எனவே இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கும் சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 1, குரூப் 2 பணியிடங்களில் காலியிடங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். எனவே, குரூப் 4 அறிவிப்பில் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.