📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 09, 2026 09:03 PM

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

சென்னை: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டிலும் தவெக வெற்றி பெற்றது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில், தாராபுரம் தொகுதியில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தவெக வேட்பாளர் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

மதுராந்தகத்தில் 27 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றது. திமுக இரண்டாவது இடமும் அதிமுக மூன்றாவது இடமும் பிடித்தன.

தாராபும் சுவாரஸ்யம்...

தாராபுரம் தொகுதியின் வாக்கு முன்னிலை நிலவரம் ஆரம்பத்திலிருந்தே சுவாரஸ்யமாக இருந்தது. முதலில் தவெக முன்னிலை, பின்னர் அதிமுக முன்னிலை எனப் போக்குக் காட்டியது. ஒரு கட்டத்துக்குப் பின்னர் திமுக இரண்டாம் இடத்துக்கு முந்தியது. திருப்பங்கள் பல கடந்து தாராபுரத்தை வசப்படுத்தியுள்ளது தவெக.

23 சுற்றுகள் நிறைவில் தவெக வெற்றி

தவெக - சத்யபாமா: 66,841

திமுக - சுகன்யா: 57,370

அதிமுக - பானுமதி: 45,280

நாதக - கார்த்திகா - 5268

இந்திய கம்யூனிஸ்ட் - ப.லட்சுமணன் - 1157 வாக்குகள் பெற்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் தவெக 46,438 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இப்போது 66,841 வாக்குகள் பெற்றுள்ளது.

தாராபுரத்தில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் 80.25% வாக்குகள் பதிவாகின. 320 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

25-வது சுற்று முடிவில் மதுராந்தகம் நிலவரம்:

தவெக - மரகதம் குமரவேல்: 74,048

திமுக - பரந்தாமன்: 54,008

அதிமுக - கனிதா சம்பத்: 47,450

நாதக - ஜானகிராமன்: 2,709

சிபிஎம் - பி.சுகந்தி: 1,986

இடைத்தேர்தல் முடிவு வசமானதை சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் கொண்டாடிய கட்சித் தொண்டர்கள்.

படம்: எல்.சீனிவாசன்

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகி ராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மதுராந்தகத்தில் 86.26%, வாக்குகள் பதிவாகின. 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி:

அதேபோல், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் தவிர்த்து இதர வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் 112 தபால் வாக்குகள் பதிவானது. இதில் 65 வாக்குகள் பெற்று என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முன்னிலை பெற்றார். 31 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குககள் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

கொண்டாட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்

படம்: எம்.சாம்ராஜ்

இறுதியில் பெற்ற வாக்குகள்:

அசோக் ஆனந்த் (என்.ஆர். காங்) - 13,358

விநாயகம் (காங்கிரஸ்) - 4,876

சேதுசெல்வம் (திமுக) - 2,664

சலீம் (இந்திய கம்யூ.) - 310

கார்த்திக் குமாரி (நாதக) - 172

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்தத் தேர்தலில் காங்கிரஸை தவிர்த்து இதர வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.