தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? மருத்துவமனை அளித்த அப்டேட்
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? மருத்துவமனை அளித்த அப்டேட்
அவர் அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Published : September 18, 2026 at 5:38 PM IST
சென்னை: தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை சார்ந்த மருத்துவ அளவீடுகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக மருத்துவனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் வி.எஸ்.பாபு, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று திடீரென ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று (செப்டம்பர் 18) வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவரை பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழு தொடர் கண்காணிப்பு செய்து வருகின்றனர். குறிப்பாக, அவர் தமக்கு அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராகவும், திருப்திகரமாகவும் இருப்பதாக நேற்று மருத்துவமனை தரப்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த சூழலில் இன்று மீண்டும் அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாக அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.