📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 07:05 PM

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை; மருத்துவமனையில் நேரில் கேட்டறிந்தார் முதல்வர் விஜய்

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை; மருத்துவமனையில் நேரில் கேட்டறிந்தார் முதல்வர் விஜய்

சென்னை: சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து முதல்வர் விஜய் நேரில் சென்று கேட்டறிந்தார்.

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவான வி.எஸ்.பாபு, சுவாசக் கோளாறு காரணமாக, கடந்த செப்.,9ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு வாரங்களாக அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வி.எஸ். பாபுவின் உடல்நிலை பற்றிய விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அதிகாரப்பூர்வ அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறது.

அதில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தவெக எம்எல்ஏ பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக, முதல்வரும், தவெக தலைவருமான விஜய், மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம், எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் முதல்வர் விஜய் கேட்டறிந்தார்.