📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 08:04 PM

கம்யூனிஸ்டு கட்சி எந்த காலத்திலும் ஊழலில் ஈடுபட்டதில்லை

கம்யூனிஸ்டு கட்சி எந்த காலத்திலும் ஊழலில் ஈடுபட்டதில்லை

த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்கிறோம், கூட்டணியில் இல்லை என வீரபாண்டியன் கூறினார்.

இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகத்தில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை நிகழ்த்தி, வாக்கு சேகரித்து வருகின்றனர். நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மக்களிடம் ஆதரவு திரட்டினார். சுகந்தி மையூர், சம்பாதி நல்லூர், அத்தியூர், சித்தண்டி, பிலாப்பூர் போன்ற பல இடங்களில் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் வீரபாண்டியன் பேசியபோது, 'மதுராந்தகம் தொகுதி பொதுமக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைக்க, தோழர் சுகந்திக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். கம்யூனிஸ்டு கட்சி எந்த காலத்திலும் ஊழலில் ஈடுபட்டதில்லை. த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்கிறோம், கூட்டணியில் இல்லை. ஆட்சியை கவிழ்க்கும் சிந்தனை எங்களுக்கு இல்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்டு கட்சிகளின் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும். அதை படித்துவிட்டு முதல்-அமைச்சரிடம் கூற வேண்டும்' என்றார்.