Business
September 29, 2026 04:03 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 குறைவு
சென்னை: தமிழகத்தில் கடந்த சனிகிழமை, 22 காரட் தங்கம் கிராம், 14,000 ரூபாய்க்கும், சவரன், 1,12,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு, 235 ரூபாய் குறைந்து, 13,765 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,880 ரூபாய் சரிவடைந்து, 1,10,120 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் குறைந்து, 13,665 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 800 ரூபாய் சரிவடைந்து, 1,09,320 ரூபாய்க்கு விற்பனையானது.
இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 2,680 ரூபாய் சரிவடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
Business