📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 28, 2026 07:03 PM

கச்சா எண்ணெய் விலை அதலபாளத்திற்கு சரிய போகிறது

கச்சா எண்ணெய் விலை அதலபாளத்திற்கு சரிய போகிறது

உலகில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் மிக முக்கிய கடல் எல்லையான ஹார்முஸ் நீரிணை உள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த நீரிணை மூடப்பட்டது.

இதனால் உலகநாடுகளிடையே கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, எரிபொருளுக்கான அவசரநிலையை அறிவிக்க கூடிய நிலை ஏற்பட்டது. ஹார்முஸ் நீரி ணையை மீண்டும் திறப்பது தொடர்பாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை குறித்து அமெரிக்க அதிபர் டொலாண்டு டிரம்ப் கூறியதாவது:-

ஈரான் சரணடைந்தவுடன் போர் விரைவில் முடிவுக்கு வரும். ஈரான் சரணடைந்தவுடன் கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியப் போகிறது. ஜோ பைடனின் நிர்வாக காலத்தை விட எனது நிர்வாகத்தின் கீழ் எல்லா பொருட்களின் விலைகளும் குறைந்து வருகிறது. எரிபொருள் செலவுகள் குறைந்துள்ளன. நமது நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறுமை குறைவாக உள்ளது.

நாட்டின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் இப்போதுதான் வெளியாகியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகமான மக்கள் வேலை செய்கிறார்கள். நம்மிடம் மிகச் சிறந்த நிர்வாகம் உள்ளது; வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வறுமை குறைவாக உள்ளது; தனிநபர் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.