📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 17, 2026 04:00 PM

தமிழ்நாட்டின் 79 விழுக்காடு நீர்ப்பாசனக் குளங்கள் வறண்டு கிடக்கின்றன

தமிழ்நாட்டின் 79 விழுக்காடு நீர்ப்பாசனக் குளங்கள் வறண்டு கிடக்கின்றன

சென்னை: தமிழ்நாட்டில் 79 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நீர்ப்பாசனக் குளங்கள் வறண்டு கிடக்கின்றன அல்லது அவற்றின் கொள்ளளவில் கால் பங்கிற்கும்கீழ் நீர் குறைந்துள்ளது.

தமிழகத்தின் நீர் ஆதாரங்களை நிரப்புவது குறித்த கவலைகள், எல் நினோ சூழலால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் அக்டோபர் 15ஆம் தேதியன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியது.

பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

ஊடகங்களுக்குக் கிடைத்த நீர்வளத் துறையின் தரவுகளின்படி மாநிலத்தின் 14,141 நீர்ப் பாசனக் குளங்களில் 4,734 குளங்கள் வியாழக்கிழமையன்று வறண்டு காணப்பட்டன. மேலும் 6,385 குளங்களில் அவற்றின் கொள்ளளவில் ஒரு விழுக்காடு முதல் 25 விழுக்காடு வரை மட்டுமே நீர் இருந்தது. மாநிலத்தின் 90 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு 60.756 டிஎம்சி ஆக இருந்தது. இது, அவற்றின் மொத்த கொள்ளளவில் 27.1 விழுக்காடு மட்டுமே ஆகும்.

குறிப்பாக மதுரையில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, அங்குள்ள 1,340 குளங்களில் 1,148 குளங்கள் வறண்டு போயுள்ளன. தஞ்சாவூரில் உள்ள 641 குளங்களில் 535 குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. திருவள்ளூரில் உள்ள 578 குளங்களில் 295 குளங்கள் வறண்டுள்ளன.

இதற்கு நேர்மாறாக, கன்னியாகுமரியில் 411 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இதற்கிடையே திருப்பூரில் மழை தொடர்பான சம்பவத்தில் காங்கேயத்தில் வியாழக்கிழமை மாலை சாலையோரப் புளியமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பி. மரியாள் என்ற 53 வயது பெண் உயிரிழந்தார். ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அவர் மளிகைக் கடைக்குச் சென்றபோது இரவு 8.45 மணியளவில் அவரது தலையில் மரக்கிளை விழுந்தது. அப்பகுதியில் பெய்த கனமழையால் நடந்த இந்தச் சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் டெல்டா உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு அடுத்த சில நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.