📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 09, 2026 12:03 AM

திமுக

திமுக

திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடுநிலையாகத்தான் செயல்படுகிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது ஜேசிடி பிரபாகரின் செயல்பாடுகள் ஆகும்.

சபாநாயகரின் செயல்பாடு:

முதன்முறை சபாநாயகராக பொறுப்பேற்ற ஜேசிடி பிரபாகர் இந்த அவையை எப்படி நடத்தப்போகிறார்? என்று பலரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவரது செயல்பாட்டிற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்த நிலையில், நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலுரை குறித்து திமுக-வினர் பேசுவதற்கு அனுமதி அளிக்காததற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

நடுநிலையான செயல்பாடு:

இந்த சூழலில், திமுக கூட்டணி கட்சித் தலைவரும், விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ-வுமான பிரேமலதா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, என்னைப் பொறுத்தவரை பேரவைத் தலைவர் நடுநிலையாகத்தான் செயல்படுகிறார். நாம் அப்படி இல்லை என்று சொல்லிவிட முடியாது.

அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார். அனைவரையும் அனுசரித்துச் செல்கிறார். அவரால் முடிந்தவரை அனைவருக்கும் அவர் சம வாய்ப்பை வழங்குகிறார். வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. அதிகபட்சமாக அவர் பேசியது என்னவென்றால் அமருங்கள், எல்லோரும் அமருங்கள் என்று சொல்லிக்கொண்டேதான் இருப்பார். அவர் நடுநிலையாக செயல்பட்டிருக்கிறார்.

திமுக கேட்கவில்லை:

நேற்று நடந்த விஷயம் அவர் பல முறை அவர் சொன்னார். அனைவரும் இருக்கையில் சென்று அமருங்கள். நான் சொல்கிறேன் என்றார். அவர்கள் கேட்காதபோது அவர் வேறு வழியில்லாமல்தான் வெளியில் அனுப்பினார். பேரவைத் தலைவர் முதலில் எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார். அதன்பின்பு இல்லை என்று மறுத்துவிட்டார். ஏன் இல்லை என்று சொன்னார் என்று பேரவைத் தலைவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டணிக்கு எதிரான பிரேமலதாவின் பேச்சு:

பிரேமலதா விஜயகாந்த் கடந்த தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். தேமுதிக போட்டியிட்ட 10 தொகுதிகளில் 1 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போதே மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மீது பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் குற்றச்சாட்டுதான் என்று மு.க.ஸ்டாலின் இருந்த மேடையிலே பேசியிருப்பார். அப்போது, பிரேமலதாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

தற்போதும், கூட்டணி கட்சியான திமுக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை விமர்சித்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் சபாநாயகருக்கு ஆதரவாக பேசியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரவையில் உதயநிதியே பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி