📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 07:03 PM

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 88- வயதான துரைமுருகன், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டது என சுறுசுறுப்பாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அண்மையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்ற துரைமுருகன் அதில் உரையாற்றவும் செய்தார். கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் துரைமுருகன் இதய நோய் பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. துரைமுருகன் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திமுகவின் பொதுச் செயலாளராக கே.அன்பழகனின் மறைவுக்கு பிறகு கடந்த 2020ல் தேர்வு செய்யப்பட்டார். கடந்த திமுக ஆட்சியில் நீர் வளத் துறை அமைச்சராக இருந்தார். தமிழகத்தில் நீண்டகாலமாக எம்எல்ஏவாக இருந்த மூத்த அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.