📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 28, 2026 08:04 PM

திமுக முன்னாள் அமைச்சர் தியாகராஜன் தாயாரிடம் ஆசி பெற்ற முதல்வர் விஜய்

திமுக முன்னாள் அமைச்சர் தியாகராஜன் தாயாரிடம் ஆசி பெற்ற முதல்வர் விஜய்

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த முதல்வர் விஜய், அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் தியாகராஜன் தாயாருமான ருக்மணியிடம் முதல்வர் விஜய் ஆசி வாங்கினார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி. இவர், மறைந்த முன்னாள் அமைச்சர் பழனிவேல் ராஜனின் மனைவி; முன்னாள் அமைச்சர் தியாகராஜனின் தாயார். மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்துக்கு முன், தவெக அரசை ருக்மணி விமர்சித்தார். ''அறங்காவலர் குழு உறுப்பினர்களை குட முழுக்கு தொடர்பாக ஆலோசிக்கவில்லை. தன்னிச்சையாக அரசியல் தலையீட்டால் குடமுழுக்குப் பணிகள் நடக்கின்றன. கோவில் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளது'' என்றார். இதற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில் இன்று மதுரை வந்த முதல்வர் விஜய், மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். வாயிலில் விஜயை, பட்டு சால்வை அணிவித்து அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி வரவேற்றார். அவரிடம் விஜய் நலம் விசாரித்துடன், அவரது கால்களில் விழுந்து ஆசி பெற்றார். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வயதில் மூத்தவரான அறங்காவலர் குழு தலைவர் ருக்மணியிடம் விஜய் ஆசி வாங்கியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.