திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து; ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்; கேட்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
சென்னை: திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து தான் நடந்தது; ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: ஜெம் வீரமணியை காப்பாற்றும் வேலையில்தான் திமுக ஈடுபட்டுள்ளது; கடந்த ஆட்சியில், வீரமணி மீதான வழக்கில் பலர் பேரம் பேசி கட்டப்பஞ்சாயத்து செய்தபோது, முதல்வராக இருந்த ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்? வீரமணி குப்பனே, சுப்பனோ இல்லை.அவர் அவர்களுக்கு 30, 40 வருடங்களாக தெரிந்த நபர்; மிகப்பெரிய தொழிலதிபர்.
வீரமணி மீதான வழக்கை விசாரிக்க ஏன் சிறப்பு குழு அமைக்கவில்லை. வீரமணியிடம் 500 கோடி ரூபாய் வரை பேரம் பேசி பணம் பறித்ததாக புகார் வந்து கொண்டிருக்கிறது. முதல்வரின் உளவுத்துறை அதிகாரிகள் ஸ்டாலினுக்கு வீரமணி குறித்த தகவலை கூறவில்லையா? வீரமணி தொடர்பான புகாரில் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு என்ன? வீரமணியிடம் பேரம் பேசும் போது ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார்?யார் யார் மீது ஆதாரம் இருக்கிறதோ?
யார் யார் பணம் வாங்கி இருக்கிறார்களோ, யார் யார் எல்லாம் தொடர்பில் இருக்கிறார்களோ, குற்றச்சம்பவத்தை மறைக்க முயற்சி செய்தார்களோ? குழந்தைகள் மீது இவ்வளவு மோசமான குற்றச்சம்பவத்தை செய்து, இந்த சம்பவத்தில் ஆதாயம் அடைய முயற்சி செய்து, யார் யாரெல்லாம் சம்பந்தம் பட்டு இருக்கிறார்களோஅனைவர் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எந்த பாரபட்சமும் இல்லாமல் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்