📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 08, 2026 04:04 PM

திமுக ஆட்சிக் காலங்களில் தான் நவீன தமிழகம்: சொல்கிறார் ஸ்டாலின்

திமுக ஆட்சிக் காலங்களில் தான் நவீன தமிழகம்: சொல்கிறார் ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சிக் காலங்களில்தான் நவீன தமிழகம் கட்டியெழுப்பப்பட்டது என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்ந்து நிற்கும் வளர்ச்சிச் சின்னங்கள் பறைசாற்றும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: திராவிட மாடல் அரசால் கட்டி முடிக்கப்பட்ட பூந்தமல்லி - போரூர் - வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அதுகுறித்த சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கருணாநிதி ஆட்சி காலத்தில் நான் துணை முதல்வராக இருந்தபோது துவங்கப்பட்டது.

பல்வேறு தருணங்களில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். வரும் 11ம் தேதி பிரதமர் திறந்து வைக்கப்பட இருக்கும் பூந்தமல்லி - போரூர் - வடபழனி வழித்தடத்தை 2025ம் ஆண்டு இறுதிக்குள்ளேயே திறந்திட அனைத்து முயற்சிகளையும் திராவிட மாடல் அரசில் செய்தோம்.

மிகுந்த மகிழ்ச்சி

வளர்ச்சி சின்னங்கள்

ஆண்டுக்கணக்கில் நான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ ரயில் எனும் குழந்தை அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்கிறேன். இவ்வேளையில் வள்ளுவர் கோட்டம் குறித்த ஒரு வரலாற்று நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் மட்டுமல்ல, சென்னை மாநகரில் காணும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் திமுக அரசின் பெயர்தான் இருக்கும். திமுக ஆட்சிக் காலங்களில்தான் நவீன தமிழகம் கட்டியெழுப்பப்பட்டது என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்ந்து நிற்கும் வளர்ச்சிச் சின்னங்கள் பறைசாற்றும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.