📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 22, 2026 02:02 AM

 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காலை 5:30 மணிக்கு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்தது.

நேற்று காலை 8:30 மணிக்கு, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இன்று, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அது மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிஷா கடலோரப் பகுதிகளை அடையக் கூடும்.

மத்திய தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று, மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில், சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.