📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 21, 2026 10:03 PM

Rooftop Solar Subsidy: வீட்டின் கூரை மேல் சோலார் மின் உற்பத்தி - ரூ.1 லட்சம் வரை நிதியுதவி -

Rooftop Solar Subsidy: வீட்டின் கூரை மேல் சோலார் மின் உற்பத்தி - ரூ.1 லட்சம் வரை நிதியுதவி -

Rooftop Solar Subsidy: வீட்டின் கூரை மேல் சோலார் மின் உற்பத்தி - ரூ.1 லட்சம் வரை நிதியுதவி - யாருக்கு? விண்ணப்பிப்பது எப்படி?

TN Govt Solar Subsidy: வீட்டின் கூரை மேல் சோலார் பேனல்களை அமைத்து மின்சார தயாரிக்க முன்வரும் நபர்களுக்கு, ரூ.22 ஆயிரம் வரை நிதி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு இன்று தொடங்கிவைக்கிறது.

TN Govt Solar Subsidy: மத்திய அரசின் நிதியுடன் சேர்த்தால் வீட்டின் கூரை மேல் சோலார் பேனல்களை அமைத்தால், பயனாளர்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை நிதியுதவியை பெற முடியும்.

சோலார் மின் உற்பத்தி:

காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்கள் மின்சார பயன்பாடு என்பது தீவிரமாக அதிகரித்து வருகிறது. அதேநேரம், காற்றாலை மின்சார உற்பத்தி ஆகியவை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் பல மின்வெட்டு பிரச்னை ஏற்பட, வெளிசந்தைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து தமிழ்நாடு அரசு மின்சாரத்தை வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்தபடி, வீடுகளின் மின்சார நுகர்வையும் மின் கட்டணங்களையும் குறைக்கும் நோக்கில், அவற்றின் கூரைகளில் சூரிய வெப்பத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மாநில அரசு முதல் முறையாக ரூ.22,000 வரை மானியம் வழங்க உள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு இன்று தொடங்கி வைக்க உள்ளது.

ரூ.1 லட்சம் வரை மானியம்:

ஏற்கனவே மத்திய அரசின் பிரதமர் சூர்யா கர் திட்டத்தின் கீழ், வீட்டு கூரையின் மேல் சோலார் பேனல்களை அமைத்து 3kW வரையிலான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்திற்கு சுமார் ரூ.78,000 வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாநில அரசின் கூடுதல் மானியத்தால் இந்த உதவித்தொகையானது ரூ.1 லட்சம் ஆக உயர்கிறது. வீட்டு உபயோக நுகர்வோரிடையே சூரிய மின்சார பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக. மத்திய அரசின் திட்டத்துடன் இணைந்து மாநில அரசு மானியம் வழங்கும் என்றும், அதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு எவ்வளவு மானியம்?

சூரிய சக்தி மூலம் 1kW மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சோலார் பேனல்களை நிறுவுபவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ரூ.30,000 உடன் கூடுதலாக மாநில அரசு ரூ.5,000 வழங்கும். அதேபோல், 2kW மின்சாரத்திற்கான சோலார் பேனல்களை நிறுவுபவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ரூ.60.000 உடன் கூடுதலாக மாநில அரசு ரூ.10,000 மானியம் வழங்கும். 3kW மின்சாரத்திற்கான சோலார் பேனல்களை நிறுவுபவர்களுக்கு, மத்திய அரசிடமிருந்து ரூ.78,000 மற்றும் மாநில அரசிடமிருந்து ரூ.22,000 என மொத்தம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பேர் இலக்கு

சனிக்கிழமையன்று தமிழ்நாடு எரிசக்தித் துறையால் வெளியிடப்பட்ட அரசாணையில், மத்திய அரசின் திட்டம் முடிவடையும் வரும் மார்ச் 2027-க்குள் 1 லட்சம் பயனர்க்ளை சேர்க்கும் வகையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் (TNGECL) முன்மொழிவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையானது, மத்திய அரசு இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரரின் தரவுகளைப் பெற்று, சேவை செயல்படுத்தப்பட்ட பிறகு மாநில அரசின் மானியத்தை நேரடியாக விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Fishermen Alert: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி.. கடலோர மாவட்டங்களில் வானிலை, தமிழக மீனவர்களுக்கான வார்னிங்

மானியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி