📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 27, 2026 04:03 PM

தென் ஆப்ரிக்காவில் இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பலி

தென் ஆப்ரிக்காவில் இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பலி

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவின் வெவ்வேறு நகரப் பகுதிகளில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரின் தென்மேற்கே உள்ள வெடெலா இரவு ஒரு மதுபான விடுதிக்குள் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கேப் டவுன் நகருக்கு அருகே உள்ள எல்வாண்ட்லே பகுதியில் உள்ள மற்றொரு விடுதிக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 27 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூரமான தாக்குதல்களுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.