📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 18, 2026 07:03 PM

தெம்பனிஸ் HDB புளோக் விபத்து: யாருக்கும் காயம் இல்லை

தெம்பனிஸ் HDB புளோக் விபத்து: யாருக்கும் காயம் இல்லை

தெம்பனிசில் நேர்ந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்றவர், காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

தெம்பனிஸ் ஸ்திரீட் 81ல் உள்ள புளோக் 896ஏ அமைந்துள்ள சாலையில் கார் சறுக்கிச்சென்று விபத்துக்குள்ளானதாகச் சனிக்கிழமை (அக்டோபர் 17) காலை மணி 9.05க்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.

காரை ஓட்டிச் சென்றவர் 72 வயதுப் பெண்.

விபத்து நேர்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. அந்தப் படங்களில், சாம்பல் நிற கார் ஒன்று புளோக்கின் தூணிலும் சுவரிலும் மோதி நிற்பதைக் காண முடிகிறது. காரின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்து இருந்தது.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.