📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 18, 2026 05:03 PM

மாயமான நர்ஸ் சடலமாக மீட்பு

மாயமான நர்ஸ் சடலமாக மீட்பு

பெருந்துறை: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியை சேர்ந்த ராமையா மகன் ரஞ்சித் குமார், 27, கட்டுமான தொழிலாளி. இவரது அத்தை மகள் உத்திரா, 26; நர்சிங் படித்தவர். இருவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகைக்கு வீட்டில் வசிக்கின்றனர்.

ரஞ்சித்குமார் கட்டட வேலைக்கு சென்றார். உத்திரா அதே பகுதியில் தனியார் மருத்துவமனையில் கடந்த, 3ம் தேதி தேதி முதல் நர்சாக வேலை பார்த்தார். காலையில் ரஞ்சித்குமார் வேலைக்கு செல்லும்போது, மனைவியை மருத்துவமனையில் விட்டு செல்வார். இரவு திரும்ப அழைத்து செல்வார். கடந்த, 14ம் தேதி மனைவியை அழைக்க ரஞ்சித்குமார் மருத்துவமனைக்கு சென்றார். இரவு, 7:15 மணிக்கே அவர் சென்று விட்டதாக கூறவே வீட்டுக்கு சென்றார். ஆனால், வீட்டில் மனைவி இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், ஊத்துக்குளி போலீசில், 15ம் தேதி புகாரளித்த நிலையில், போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகில், பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் ஒரு காட்டில், இளம்பெண் சடலம் நிர்வாண நிலையில் கிடப்பதாக, பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்ற நிலையில் அழுகிய நிலையில் சடலம் இருந்தது. அதேசயமம் உடலின் மீது கிடந்த சிம்மிஸ், அருகில் கிடந்த செருப்பை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், காணமால் போன நர்ஸ் உத்திரா என்பது தெரிய வந்தது.

வீட்டுக்கு செல்லும் வழியில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.