📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 25, 2026 05:03 PM

டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற இந்தியா.. ஆசிய விளையாட்டில் 20 பதக்கங்களை எட்டி அசத்தல் சாதனை

டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற இந்தியா.. ஆசிய விளையாட்டில் 20 பதக்கங்களை எட்டி அசத்தல் சாதனை

டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற இந்தியா.. ஆசிய விளையாட்டில் 20 பதக்கங்களை எட்டி அசத்தல் சாதனை

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா மற்றும் தியா சிதாலே ஜோடி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 20-வது பதக்கத்தை எட்டிப் பிடித்து புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், மனுஷ் ஷா - தியா சிதாலே கூட்டணி சீனாவின் முன்னணி ஜோடியான வாங் சுகின் - சன் யிங்ஷா கூட்டணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய சீன ஜோடி 11-8, 11-5, 11-8, 11-2 என்ற நேர் செட் கணக்கில் (4-0) வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் போராடி வீழ்ந்த இந்திய ஜோடி வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றது

அடியோடு மாறப்போகும் சிஎஸ்கே.. பிளெமிங்கை நீக்கிவிட்டு ஜாகீர் கானை தோனி தேர்வு செய்த பின்னணி சீனாவின் அசைக்க முடியாத ஆதிக்கத்திற்கு மத்தியிலும், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் மனுஷ் ஷா - தியா சிதாலே ஜோடி வெண்கலம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.