📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 25, 2026 07:04 PM

ஆப்கானிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுத்த நேபாளம்.. ஆசிய விளையாட்டில் ட்விஸ்ட்.. காலிறுதி போக முடியுமா?

ஆப்கானிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுத்த நேபாளம்.. ஆசிய விளையாட்டில் ட்விஸ்ட்.. காலிறுதி போக முடியுமா?

ஆப்கானிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுத்த நேபாளம்.. ஆசிய விளையாட்டில் ட்விஸ்ட்.. காலிறுதி போக முடியுமா?

நிஷின்: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் போட்டியின் குரூப்-ஏ லீக் ஆட்டத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முன்னணி அணியான ஆப்கானிஸ்தானுக்கு நேபாள அணி யாரும் எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வியை அளித்தது. சுழற்பந்து வீச்சில் ஆப்கானை நிலைகுலைய வைத்த நேபாளம், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தொடரில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நிஷின் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், நேபாள அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது. லலித் ராஜ்பன்ஷி 13 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்து ஆப்கானின் டாப் ஆர்டரை சரித்தார். தொடர்ந்து குஷால் புர்டெல் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளி மிரட்டினார். நஜிபுல்லா சத்ரான் 30 ரன்கள், பைசல் ஷினோசாதா 30 ரன்கள் எடுத்து போராடிய போதிலும், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த அதிர்ச்சித் தோல்வியால் ஆப்கானிஸ்தான் அணியின் காலிறுதி வாய்ப்பு அந்தரத்தில் தொங்குகிறது. ஆப்கானிஸ்தான் தனது 2 லீக் போட்டிகளையும் விளையாடி முடித்துவிட்டது அதில் 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளது.

குரூப்-ஏ பிரிவின் கடைசி ஆட்டத்தில் நேபாளம் மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் நேபாளம் வெற்றி பெற்றால், 4 புள்ளிகளுடன் குரூப் சாம்பியனாக நேரடியாக காலிறுதிக்கு முன்னேறிவிடும். ஜப்பான் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாததால் வெளியேறும். அப்போது ஆப்கானிஸ்தான் இரண்டாவது அணியாக காலிறுதிக்கு முன்னேறும்.

ஜாகீர் கானை லக்னோ கழற்றிவிட்டது ஏன்? கோயங்கா மீது பாயும் விமர்சனம்.. ஜாஃபர், கைஃப் காரசார கருத்து ஒருவேளை ஜப்பான் அணி நேபாளத்தை வீழ்த்தினால் மட்டுமே, மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலை பெற்று, ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு அணிகள் தேர்வு செய்யப்படும். அது ஆப்கானிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.