📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 06, 2026 12:04 AM

டாக்ஸிக் இங்கிலிஷ் வெர்ஷன் நேத்து வெளியாச்சே.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பலத்த அடி!

டாக்ஸிக் இங்கிலிஷ் வெர்ஷன் நேத்து வெளியாச்சே.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பலத்த அடி!

சென்னை: கடந்த மாதம் ஏகப்பட்ட பில்டப்புகளுடன் பான் இந்தியா புரமோஷன் உடன் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் வெளியானது. ஆகஸ்ட் 26ம் தேதி படம் வெளியாகி முதல் ஷோ முடிந்ததுமே படத்தை பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் புரமோஷனை விட படு வேகமாக பரவி அடுத்த ஷோவுக்கு மக்கள் செல்ல யோசிக்கும் நிலைக்கு ஆளானது.

மேலும், முதல் நாள் வசூல் அறிவிப்பு 150 கோடி என அறிவித்த கேவிஎன் நிறுவனம் அதன் பின்னர் ஜன நாயகன் படத்துக்கு அமைதியாக இருந்தது போல வசூல் அறிவிப்பு எதையுமே வெளியிடாமல் சைலன்ட் ஆகிவிட்டது.

படத்தின் ரிலீஸுக்குப் பிறகு வாயே திறக்காமல் இருந்த இயக்குநர் கீது மோகன்தாஸ் நேற்று முன் தினம் ட்ரிம் செய்யப்பட்ட டாக்ஸிக் படத்தின் இங்கிலீஷ் வெர்ஷன் செப்டம்பர் 4ம் தேதி வெளியாகிறது என ட்வீட் போட்டார். அந்த ட்வீட்டுக்கு கீழ் யஷ் ரசிகர்கள் பலரும் அவரை கண்டபடி திட்டித் தீர்த்தனர்.

டாக்ஸிக் வசூல் இதுவரை: சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் டாக்ஸிக் திரைப்படம் கடந்த 10 நாட்களில் இதுவரை 330 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்னதாக லீக்கான விஜய்யின் ஜன நாயகன் ஈட்டிய அளவுக்கே டாக்ஸிக் திரைப்படமும் வசூல் செய்துள்ளது. 2 படங்களால் கேவிஎன் நிறுவனத்துக்கு பலத்த நஷ்டம் என்கின்றனர். இந்த படத்தை யஷ்ஷும் இணைந்து தயாரித்த நிலையில், அவரது சம்பளம் மொத்தமும் நஷ்டத்தில் போயிருக்கும் என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இங்கிலீஷ் வெர்ஷன் வசூல் கதம் கதம்: டாக்ஸிக் படத்துக்கு சப்போர்ட் செய்யும் விதமாக ரிஷப் ஷெட்டி, கிச்சா சுதீப், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் படத்தை பாராட்டி போஸ்ட் போட்டும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இந்நிலையில், செப்டம்பர் 4ம் தேதியான நேற்று டாக்ஸிக் படத்தின் இங்கிலீஷ் வெர்ஷன் வெளியானது. ஒட்டுமொத்தமாக அந்த படம் வெறும் 1.4 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், அதுவும் பெங்களூரு மற்றும் மும்பையில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்கள் பார்த்துள்ளனர் என்கின்றனர். இந்த படத்துக்கான இங்கிலீஷ் டப்பிங்கே அதிக செலவாகி இருக்கும் என்பது கூடுதல் தகவல்.