Scene: சூர்யாவோட ‘சீன்’ ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?.. டைட்டில் டீசரே சும்மா தரமா இருக்கே!
சென்னை: சூர்யா - ஜோதிகா இணைந்து ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தயாரிக்கும் 'சீன்' படத்தின் அட்டகாசமான டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. சூர்யாவின் 47வது படத்தின் டைட்டில் 'சீன்' தான் என ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், அதிகார்ப்பூர்வ அறிவிப்பாக தற்போது சீன் படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு சூர்யாவின் 'சீன்' திரைப்படம் வெளியாகப் போகிறது என்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 போட்டியாக வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சீன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியையும் டைட்டில் டீசரில் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏற்கனவே கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என 2 லட்டுகளை தின்ன சூர்யா 3வது வெற்றி லட்டுவை இந்த தீபாவளி பண்டிகைக்கு பலமாக சாப்பிட காத்திருக்கிறார்.
சூர்யா 47 படத்தின் டைட்டில்: ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் நடிப்பில் உருவாகியுள்ள சூர்யா 47 படத்துக்கு 'சீன்' (Scene) என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் வசூலில் செம மாஸ் சீன் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வெறித்தனமாக சூர்யா ஹாட்ரிக் ஹிட் அடிக்கப் போவது உறுதி என்கின்றனர்.
சீன் ரிலீஸ் தேதி: தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் தான் சூர்யாவின் சீன் படமும் வெளியாகிறது. வியாழக்கிழமை நவம்பர் 5ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்திருந்தால் தொடர்ந்து 4 நாட்கள் தெறி ஓட்டம் ஓடுமே என்றும் சூர்யா ஏன் அதை மிஸ் செய்து விட்டார் என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.
சூர்யா லுக் தாறுமாறு: கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தைத் தொடர்ந்து சீன் படத்திலும் சூர்யா வேறலெவல் லுக்கில் ரசிகர்களை கவர்கிறார். இந்த ஹேர்ஸ்டைல் சூர்யாவுக்கு செமையாக உள்ளது என்றும் மாற்றான் படத்தில் பார்த்ததை போல உள்ளது என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். தீபாவளிக்கு செம சீனாக சூர்யா வரப்போவது உறுதியாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சூர்யாவுடன் யாரெல்லாம் மோத காத்திருக்கின்றனர் என்பது சீக்கிரமே தெரிந்து விடும்.