Ranabaali Blue Sattai Maran Review
சென்னை: விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்த கையோடு நடித்திருக்கும் திரைப்படம் ரணபாலி. இதனை ராகுல் சங்கிரித்யன் இயக்கியிருக்கிறார். நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற சூழலில்; பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து இந்த வருடத்தின் தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் திருமணத்துக்கு முன்பு ஒத்துக்கொண்ட படங்களில் ஒன்று ரணபாலி. திருமணம் முடிந்த கையோடு சின்சியராக இந்தப் படத்தில் நடித்தார்கள். படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 ஃபீவரில் இந்தப் படம் காணாமல் போய்விடுமோ என அச்சம் படக்குழுவுக்கு இருந்தது.
ரணபாலி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அதனையடுத்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார்கள் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும். சூழல் இப்படி இருக்க நேற்று திரையரங்குகளில் படம் ரிலீஸானது. ஆனால் படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
என்ன சொன்னார்?: அந்த வீடியோவில் அவர், "1800களில் இந்தக் கதை ஆரம்பிக்குது. ஒரு குழந்தை பிறக்கும்போதே இறந்துபோகிறது. ஒரு சாமியார் குழந்தைக்கு உயிர் கொடுக்கிறார். 24 வயதில் அவன் மீண்டும் இங்கே வருவான் என சொல்கிறார். வெள்ளைக்கார காலத்தில் விவசாயிகளுக்காக நின்று சண்டையிடுகிறார். இப்போது ரணபாலியை கொல்வதற்கு வருகிறார்கள்.அதற்கு பிறகு என்ன ஆனது என்பது கதை. பிரிட்டிஷ் காலத்தில் நடந்த வரலாறு என்று நினைத்தால் அது இல்லை. இது வரலாற்று புனைவுதான்.
ஒரு சொப்பும் இல்லை: வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை எழுதியவர் பெயர்தான் (ராகுல் சங்கிரித்யன்) இந்தப் படத்தின் இயக்குநரின் பெயரும். அந்த ஒரு புத்தகத்தை படித்தால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். எனவே அது மாதிரி இந்தப் பட்த்தை ஆராய்ந்து எழுதிவிட்டார் என்று பார்த்தால் அப்படியெல்லாம் ஒரு சொப்பும் கிடையாது. வாட்ஸ் அப் ஃபார்வேர்டு மெசேஜ்களை வைத்துக்கொண்டு படம் எடுத்து வைத்திருக்கிறார்கள். பல கோடி ரூபாய் வீண்.
கேவலமாக இருக்கிறது: பிரிட்டிஷ்காரர்கள் நூறு வருடங்களுக்கு முன்னரே உலகத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு தந்திரமாக, புத்திசாலித்தனமாக, தொலைநோக்கு பார்வையோடு இருந்திருக்க வேண்டும். அவர்களை இந்தப் படத்தில் மொக்கை மொக்கையாக காட்டி; இவர்களை புத்திசாலி மாதிரி காண்பித்துக்கொள்கிறார்கள். வெள்ளைக்காரர்களின் அறிவு, திறமையை யோசிக்காமல்; இவர்களாக ஒரு கற்பனையில் படம் எடுத்திருக்கிறார்கள்.கேவலமாக இருக்கிறது.
கேமரா, ஆர்ட் என எதிலுமே கவனம் செலுத்தவில்லை. விஜய் தேவரகொண்டா நல்ல நடிகர்தான். அவருக்கு இந்த கேரக்டர் எல்லாம் பொருந்தவில்லை. லொள்ளு சபா பார்த்த மாதிரிதான் இருந்தது. படம் முழுவதும் வேஸ்ட் செய்திருக்கிறார்கள். உலகத்தை உருவாக்கி கண் முன் நிறுத்துகிறோம் என கல்கி, டாக்சிக், பாரடைஸ் என எடுத்து உயிர் எடுக்கிறார்கள். ஒன்று சஞ்சய் லீலா பன்சாலி மாதிரி கற்றுக்கொண்டு பீரியட் படம் எடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு தெரிந்ததை எடுக்க வேண்டும். எதுவும் தெரியாமல் ரணபாலி மாதிரி எடுக்கக்கூடாது. தலை வலி" என்று முடித்தார்.