Cinema
September 12, 2026 08:37 AM
ராகுல் பிரதமராவதற்கு விஜய் பிரசாரம் செய்வார்
புதிய தலைமை செயலகம் கட்டுவது குறித்து ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் பேசி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய், புதிய தலைமை செயலகம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விஷயத்தில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார்.
தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு விதித்துள்ள அபராத தொகையை, மத்திய அரசு நினைத்தால் செலுத்தலாம். அதே நேரம், அபராதம் விதித்தது, வெளியுறவு துறைக்கு பெரும் தலைகுனிவு.
'இண்டி' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும், தமிழகத்தில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் காங்., மூத்த தலைவர் ராகுல் இருப்பார். அவர் பிரதமராவதற்கு, தமிழகம் முழுதும் முதல்வர் விஜய் பிரசாரம் செய்வார். ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்.
- -மாணிக்கம் தாகூர்
தமிழக தலைவர், காங்கிரஸ்
தொடர்புடைய செய்திகள்
Cinema