📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 13, 2026 09:32 AM

பழியை போட்டுட்டு தெறிச்சு ஓடுறவங்க லீடர் இல்லை.. பிக்பாஸில் விஜய்யை அட்டாக் செய்த விஜய் சேதுபதி?

பழியை போட்டுட்டு தெறிச்சு ஓடுறவங்க லீடர் இல்லை.. பிக்பாஸில் விஜய்யை அட்டாக் செய்த விஜய் சேதுபதி?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. வழக்கம்போல் விஜய் சேதுபதிதான் இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். கலந்துகொண்ட போட்டியாளர்களில் பிளாக் பாண்டி எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் சாத்திகாவிடம் விஜய் சேதுபதி கூறிய விஷயம் ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களில் பிரசாந்த்,ஷப்னம் உள்ளிட்டோர் வீட்டுக்குள் செல்லும் முன்பே மேடையில் வைத்தே எவிக்ட் செய்யப்பட்டார்கள். அதனையடுத்து மொத்தம் 19 போட்டியாளர்கள் இந்த சீசனில் விளையாடுவதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

யார்? யார்?: அதாவது, 'லட்சுமி பிரியா, பிரித்வி, ஜாவீத் ஷெரிஃப், ஷாத்திகா, அஷ்மிதா, அவினாஷ் அசோக், பிளாக் பாண்டி, வினோத் பாபு, அடாவடி அன்சார், முனியம்மாள், ஜேசன் கௌஷி, சமா, தன்யா பல்லாத், முகேஷ் உள்ளிட்டோர் உள்ளே சென்றார்கள். கண்டிப்பாக இந்த சீசனும் செம சுவாரஸ்யமாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாக் பாண்டி எவிக்ட்: கலந்துகொண்டவர்களில் பிளாக் பாண்டி மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு பின்னால் பெரிய சதி இருப்பதாக பலரும் பேசினார்கள். ஆனால் பிக்பாஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது அவரது உடல்நிலை காரணத்தால்தான் வீட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவித்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி என்ட்ரி: பாண்டி வெளியேறியதால் இப்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்திருக்கிறது. வீட்டின் தலைவராக ஷாத்திகா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நேற்று விஜய் சேதுபதி பேசுகையில் போட்டியாளர்கள் அனைவரிடமும் ஜனநாயகம் என்றால் என்ன? தலைவர் என்றால் யார்? என அவரவர் கருத்தை கேட்டார். மேலும், ஷாத்திகாவின் வாக்குறுதிகளையும் படித்து காண்பித்தார்.

விஜய் மீது அட்டாக்?: அதனையடுத்து பேசிய அவர், "லீடர்னா என்னவென்று தெரியாமல் லீடர்ஷிப் என்றால் என்னவென்று தெரியாமல்; வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துவிட்டு; பிரச்னையும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல் பழியை தூக்கி போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை. அதெல்லாம் ஏமாற்று வேலை; என்றார். இதை பார்த்த பலரும், கரூர் துயர சம்பவத்திலிருந்தே திமுக மீது விஜய் பழியை போடுகிறார். மேலும் அன்றைய தினம் பயந்துபோய் ஓடினார். அதையெல்லாம் நினைவில் வைத்துதான் விஜய்யை விஜய் சேதுபதி மறைமுகமாக அட்டாக் செய்திருக்கிறார் என்று கருத்துக்கள் எழுந்துள்ளன.