📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 16, 2026 07:04 AM

புகைமூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களைக் கண்டுபிடிக்க சிங்கப்பூர் முயற்சி: பிரதமர், சிங்க‌ப்பூர் செய்திகள்

புகைமூட்டத்துக்குக் காரணமான நிறுவனங்களைக் கண்டுபிடிக்க சிங்கப்பூர் முயற்சி: பிரதமர், சிங்க‌ப்பூர் செய்திகள்

புகைமூட்டத்தை விளைவிக்கும் காட்டுத்தீக்கு எந்த நிறுவனங்கள் காரணமாக இருக்கக்கூடும் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

தேவைப்படும்போது சிங்கப்பூர், எல்லை தாண்டிய புகைமூட்டச் சட்டத்தின்கீழ் (Transboundary Haze Pollution Act) நடவடிக்கை எடுக்கும் என்றும் மற்ற நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயும் என்றும் அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 15) ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

“வானிலையையோ காற்றையோ எல்லை தாண்டி நிகழும் சம்பவங்களையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

“ஆனால், புகைமூட்டத்துக்கான அடிப்படைக் காரணங்களை அறிய அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்பட்டபடி சிங்கப்பூரர்களைப் பாதுகாக்க எல்லாவற்றையும் செய்வோம்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.