பொழில் தொண்டு போற்றும் தொண்டு
பொழில் தொண்டு போற்றும் தொண்டு தமிழ் இலக்கணப்படி “தொண்டு” என்பது எண் 9ஐக் குறிக்கும். 11-11-2017ல் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட வாழ்வியல் இலக்கியப் பொழில் இந்த மாதத்துடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. சங்க இலக்கியச் சாற்றைப் பிழிந்து அன்றாடம் பயில பல்வேறு இலக்கியப் பணிகளை செய்து வருகிறது. 'திணை இலக்கியத் திரட்டு' என்னும் சிறப்பு அரங்கத்தில் 9 பேர் பங்கெடுத்து தலா 12 இலக்கிய வரிகளுடன் (12 அடிகள்) பல்வேறு இலக்கிய நுணுக்கங்களை ஆராய்வர். மேலும், எண் 108ன் சிறப்புகளை விளக்கும் தொகுப்புரையும் இடம் பெறும். எதிர்வரும் 2027 ஆண்டில் பொழில் தம்முடைய பத்தாம் ஆண்டுவிழாவினை பொழில் முப்பெரும் விழாவாகக் கொண்டாட திட்டமிடுகிறது. வழக்கமான சிறார் படைப்புகள், அறிமுகவுரை, சிற்றுரை, சிறப்புரை இடம்பெறும். இந்த மாதம் திருச்சியிலிருந்து முனைவர் கரு. கலையரசி படைக்கும் 'சங்ககால மகளிர்' சிறப்புரையும், ஹேமா பிரபாகரன் படைக்கும் 'அகிம்சை' என்னும் தலைப்பில் சிற்றுரையும், பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தியின் 'முகநிலை' என்னும் தலைப்பில் அறிமுகவுரையும் இடம்பெறவுள்ளன. ஹவ்காங் அவின்யூ 6, எண் 3, பொங்கோல் சமூக மன்றத்தில் உள்ள அரங்கில் வரும் சனிக்கிழமை (11-10-2026) மாலை 3:00 மணிக்கு 'வாழ்வியல் இலக்கியப் பொழில்' என்ற தமிழ் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி 108 ஆவது சந்திப்பு நடைபெறும். மேல் விவரங்களுக்கு பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தியை 9228 8544 என்ற அலைபேசி எண்ணில் அழைக்கவும். இடம் : பொங்கோல் சமூக மன்றம் 3, ஹவ்காங் அவின்யூ 6, #02-02, சிங்கப்பூர் - 538808 தொடர்புக்கு: 92288544 என்ற எண்ணில் அழைக்கவும்