📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 09, 2026 01:00 PM

போலித் திருமணத்தால் பிலிப்பீன்சில் ஆதரவின்றி சிக்கியதாக நம்பப்படும் ஆடவர்

போலித் திருமணத்தால் பிலிப்பீன்சில் ஆதரவின்றி சிக்கியதாக நம்பப்படும் ஆடவர்

தனக்கும் பிலிப்பீன்சைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே நடந்த திருமணம் செல்லாது என்பதை ஆடவர் ஒருவர் பின்னர் அறிந்ததாக நம்பப்படுகிறது.

அதனால் அவர் ஆதரவின்றி பிலிப்பீன்சில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையப் பதிவாளர் (content creator) இட்ஸ்கேரி அந்த ஆடவரைப் பற்றி முதன்முதலில் கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி டிக்டாக்கில் பதிவிட்டார்.

ஹாஸ்பி எனும் அந்த 50 வயது ஆடவர், பிலிப்பீன்ஸ் பெண்ணுடன் தனக்கு நடந்த திருமணம் உண்மையானது என்று நம்பியதாகத் தெரிவித்ததாகவும் அண்மையில்தான் அத்திருமணம் போலியானது என்பதை அவர் உணர்ந்ததாகவும் கேரி லெயின் அபாட் என்ற இணையப் பதிவாளர் குறிப்பிட்டார். வீடின்றித் தவிக்கும் ஹாஸ்பி பிலிப்பீன்சில் ஒரு பள்ளிவாசலில் வசித்துவருவதாக கேரி தெரிவித்தார்.

அவர் பதிவேற்றம் செய்த காணொளியில் ஹாஸ்பி, தனது சிங்கப்பூர் கடப்பிதழைக் கையில் வைத்திருந்தபடி பள்ளிவாசலை சுற்றிக் காண்பிப்பது தெரிகிறது.

முன்னதாக கேரி செப்டம்பர் 21ஆம் தேதி பதிவிட்ட நேர்காணலில் ஹாஸ்பி, சிங்கப்பூரில் சம்பந்தப்பட்ட பிலிப்பீன்ஸ் பெண்ணைச் சந்தித்ததாகவும் அவரை மணமுடிக்கத் தான் விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு அதிக காலம் தேவைப்பட்டதால் இருவரும் பிலிப்பீன்சில் மணமுடிக்க முடிவெடுத்ததாக அவர் கூறியிருந்தார்.

பிறகு சிங்கப்பூரில் இன்னொரு திருமணச் சடங்கை நடத்தத் தாங்கள் திட்டமிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். அனால், அதற்கு முன்பே அவர்களின் உறவு முறிந்ததாக அவர் தெரிவித்தார்.

குடிநுழைவு சார்ந்த பிரச்சினைகளை எதிர்நோக்கும் ஹாஸ்பிக்குத் தான் உதவ எண்ணம் கொண்டுள்ளதாக கேரி செப்டம்பர் 21ஆம் தேதி தகவல் பகிர்ந்திருந்தார்.