போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரம் செய்யும் தவெக வேட்பாளர்கள்
போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரம் செய்யும் தவெக வேட்பாளர்கள்
சென்னை: மதுராந்தம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் பிரசாரம் செய்யும் இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று முன்தினம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் வெருவேடம்பாளையம் பகுதியில் வாக்குச்சேகரிக்க சென்ற சத்தியபாமாவின் பிரசார வாகனத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு உப்பாறு அணை, தண்ணீர் பிரச்னை குறித்தும், பிஏபி பாசன கால்வாய் தண்ணீர் பிரச்னை குறித்தும் கேள்வி எழுப்பி விரட்டியடித்தனர்.
இதையடுத்து இரு வேட்பாளர்களும் போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் வாகனங்கள் முன்னே செல்ல, போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் நின்றபடி தவெக வேட்பாளர் சத்தியபாமா நேற்று வாக்குசேகரித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.