பிக்பாஸ் முத்துக்குமரன் திமுகவா? தவெகவா?.. சர்ச்சைகளுக்கு இடையே சண்டை.. என்ன கொடுமை சார் இது?
சென்னை: சோஷியல் மீடியா எங்கும் பிக்பாஸ் முத்துக்குமரன்தான் விரவி கிடக்கிறார். வஹிதா என்ற பெண் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்ததை தொடர்ந்து பலரும் அவரை விமர்சித்துவருகிறார்கள். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்னொரு சண்டையும் கிளம்பி விவகாரம் முற்ற தொடங்கியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் டைட்டில் வின்னராக தேர்வானவர் முத்துக்குமரன். ஏற்கனவே தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர்; அசைவ உணவுகளை ருசிக்கும் வீடியோக்களை போஸ்ட் போட்டும் பிரபலமடைந்தார். இவைகளோடு சேர்ந்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனதும் அவரை மேற்கொண்டு பிரபலமாக்கியது. சில திரைப்படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க வஹிதா என்ற பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
வஹிதாவின் வீடியோ: அந்த வீடியோவில் அவர், "இன்னும் எனக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என தெரியவில்லை. மனதில் இருப்பதை சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறேன். கடந்த முறை சந்திக்கும்போது அவர் என்னை வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். அது கொஞ்சம் கடத்தல்தான். வீட்டில் வைத்து எனக்கு ஆயிரமாயிரம் முத்தம் கொடுத்தார். நிறைய காதல் கொடுத்தார். அதற்காகத்தான் நான் காத்திருந்தேன். என்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை.
தற்கொலை முயற்சி: நானும், அவரும் உடல் ரீதியான தொடர்பும் வைத்துக்கொண்டோம். ஏற்கனவே ஒரு காதல் தோல்வியில் நான் இருக்கிறேன் என அவருக்கு தெரியும். என்னை பேசியே மயக்கிவிட்டார். நான் தாலி கட்டுவிடுவேன் என சொல்லி எக்கச்சக்க முத்தங்கள் கொடுத்தார். ஆண்களை நம்பக்கூடாது என எல்லோரிடமும் சொல்வேன். நானே இப்படி ஆகிவிட்டேன். உன் விருப்பம் இல்லாமல் உன்னை தொடமாட்டேன் என திருப்பி திருப்பி சொன்னார். தாலி கட்டுவேன் என்று அவர் சொன்னபோது நான் நம்பிவிட்டேன். எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். போதும் சாமி முடியவில்லை. எல்லாமே முடியப்போகிறது. இனிமேல் எனக்கு தெம்பு இல்லை" என சொல்லி தற்கொலைக்கு முயன்றார்.
A post shared by wahidha begum (@wahidha_akdhar)
இன்னொரு வீடியோ: எப்படியோ நல்வாய்ப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலமும் தேறிவிட்டார். இது ஒருபக்கம் இருக்க மற்றொரு வீடியோவும் வெளியானது. அதில் கையில் சிகரெட் மற்றும் மதுவுடன் பேசியிருந்தார் வஹிதா. எனவே அவர் போதையில் பேசுவதாக விஷயம் மாறியது. நிலைமை இப்படி இருக்க இதுகுறித்து விளக்கமளித்த முத்துக்குமரன், 'வஹிதா எனது தோழிதான். அவர் ஏன் இப்படி செய்தார் என கிளாரிட்டி கேட்கிறேன்' என்றும் தெரிவித்திருந்தார்.
சர்ச்சைகளுக்கு இடையே சண்டை: இருப்பினும் முத்துக்குமரனை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. இவ்வளவு காலமும் முற்போக்கு பேசிவிட்டு இப்படித்தான் பெண்ணை ஏமாற்றுவதா என சகட்டுமேனிக்கு கேள்வி எழுப்புகிறார்கள். சூழல் இப்படி இருக்க இன்னொரு சண்டையும் கிளம்பியிருக்கிறது. அதாவது முன்னாள் அமைச்சர் சேகர் பாபு இருக்கும் மேடையில் ஏறியிருந்த முத்துக்குமரன், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினையும், சேகர் பாபுவையும் பாரட்டியிருந்தார்.
தவெக வீடியோவும் இருக்கு: அதை பார்த்த தவெகவினரோ, முத்துக்குமரன் திமுக ஆதரவாளர் என பேச தொடங்கினார்கள். உடனே சுதாரித்த திமுகவினரோ, இவரை ஏன் எங்கள் தலையில் கட்டுகிறீர்கள் என சொல்லி; விஜய் வென்றபோது அவர் பேசிய வீடியோவை பகிர்ந்துவருகிறார்கள். அந்த வீடியோவிலோ அவர், 'ஜோசப் விஜய் எனும் நான் அவர் சொல்லும்போது கூஸ்பம்ப்ஸ் வந்தது. இது மாற்றத்துக்கான அரசியல் என்பதை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
பணத்துக்கு வாக்களிப்பார்கள், சாதி பார்த்து வாக்களிப்பார்கள் என்பன உள்ளிட்ட விஷயங்களை விஜய் உடைத்திருக்கிறார்" என புகழ்ந்திருக்கிறார். உடனே முத்துக்குமரன் தவெககாரர்தான் லேபிள்கள் ஒட்டப்படுகின்றன. ஆகமொத்தம் இந்த சர்ச்சைகளுக்கு இடையே முத்துக்குமரன் திமுக இல்லை என அந்தக் கட்சியினரும், தவெக இல்லை என அந்தக் கட்சியினரும் மாறி மாறி சண்டை போடுகிறார்கள்.