📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 01:32 AM

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ஸ்காட்லாந்துக்கு எதிராக கம்பேக் கொடுக்கும் நெய்மர்

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ஸ்காட்லாந்துக்கு எதிராக கம்பேக் கொடுக்கும் நெய்மர்

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: ஸ்காட்லாந்துக்கு எதிராக கம்பேக் கொடுக்கும் நெய்மர்

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் காயம் காரணமாக, ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published : June 20, 2026 at 4:08 PM IST

ஹைதராபாத்: ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் மீண்டும் களம் இறங்குவதை பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில், பிரேசில் அணியானது 3-0 என்ற கோல் கணக்கில் ஹைட்டி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் பிரேசில் அணி பதிவு செய்துள்ள முதல் வெற்றியாகும்.

முன்னதாக பிரேசில் அணி தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் மொராக்கோ அணியை எதிர்கொண்ட நிலையில், 1-1 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்திருந்தது. இதனையடுத்து பிரேசில் அணி தங்களுடைய மூன்றாவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஜூன் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Three goals and three points for Brazil! 👏#FIFAWorldCup

இது ஒருபுறம் இருக்க, பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் காயம் காரணமாக, உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. ஏனெனில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக காயத்தைச் சந்தித்த நெய்மர், மொராக்கோ மற்றும் ஹைட்டிக்கு எதிரான முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் விளையாடவில்லை.

நெய்மர் இல்லாமல் மொராக்கோ அணிக்கு எதிராகப் பிரேசில் விளையாடிய முதல் லீக் போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இப்போட்டியில் பிரேசில் அணி வெற்றிக்காகக் கடுமையாகப் போராடிய நிலையிலும், ஆட்டத்தை டிரா மட்டுமே செய்ய முடிந்தது. இந்தச் சூழ்நிலையில்தான், இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் ஹைட்டி அணியை எதிர்கொண்ட பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், இந்தப் போட்டியிலும் நெய்மர் விளையாடாதது அவரது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில்தான், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் நெய்மர் கம்பேக் கொடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹைட்டி அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய பயிற்சியாளர் அன்செலோட்டி, நெய்மர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், அவர் மீண்டும் முழுவீச்சில் பயிற்சிக்குத் திரும்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Ancelotti confirms Neymar will play vs Scotland 👀🇧🇷#WorldCup pic.twitter.com/PiAOD54mxz

இதுகுறித்து பேசிய அன்செலோட்டி, "நெய்மர் இன்று முதல் தனிப்பட்ட முறையிலும், திங்கட்கிழமை முதல் அணியினருடனும் இணைந்து முழுமையான பயிற்சியில் ஈடுபடுவார். அவர் ஸ்காட்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடுவார். அவரது வருகை அணிக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கவும்

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் இரு போட்டிகளைத் தவறவிட்ட நெய்மர், தற்சமயம் கம்பேக் கொடுக்கவுள்ளது அணிக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும் கூடுதல் பலத்தையும் தந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இதனால், ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் நெய்மரின் ஆட்டம் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.