பெட்ரோல்
தற்போது எங்கு பார்த்தாலும் UPI செயலி மூலம் பணம் அனுப்பும் டிஜிட்டல் முறை தான் அதிகமாக இருக்கின்றது. மளிகை கடை முதல் பெரிய ஷோரூம்கள் வரை டிஜிட்டல் முறையில் தான் பணப்பரிவர்த்தனை நடந்து வருகின்றது. ஆனால் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் -டீசல் டீலர்கள் சங்கம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர். அதாவது மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் -டீசல் போடும்போது பில் 2000 ரூபாயை தாண்டினால் அதற்கு UPI கிடையாதாம்.2000 ரூபாய்க்கு மேல் பில் இருந்தால் கண்டிப்பாக ரொக்கமாக தான் பணத்தை செலுத்த முடியுமாம். இந்த உத்தரவை தான் மத்திய பிரதேச டீலர்கள் கொண்டுவந்து இருக்கின்றனர். திடீரென அறிவிக்கப்பட்ட இந்த உத்தரவு வாடிக்கையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்முடிவிற்கு என்ன காரணம் ?2000 ரூபாய்க்கு மேல் நடக்கும் UPI பணபரிவர்தனைக்கு 0.4% வரை MDR என்ற கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பெட்ரோல் -டீசல் டீலர்களின் லாபம் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இந்த MDR கட்டணம் அவர்களின் லாபத்தில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவும் மத்திய பிரதேச பெட்ரோல் -டீசல் டீலர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம்மேலும் ஒரு காரணமாக இருப்பது இந்த சர்வர் கோளாறு எனவும் சொல்லலாம். அதிக தொகையிலான UPI பணப்பரிவர்த்தனையின் போது சர்வர் கோளாறு காரணமாக பணப்பரிமாற்றம் பாதியில் நின்றுவிடுகிறது. வாடிக்கையாளர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்தாலும் அது பெட்ரோல் உரிமையாளரின் கணக்கில் வந்து சேராமல் இருக்கும். இதனால் தேவையில்லாத பிரச்சனை மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படும்இந்த இரண்டு காரணங்களை கருத்தில் கொண்டு தான் பெட்ரோல் -டீசல் டீலர்கள் இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என தெரிகின்றதுஇதற்கான மாற்று வழிபில் எவ்வளவாக இருந்தாலும் ரொக்கமான பணத்தை கொடுத்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் POS இயந்திரங்கள் இருக்கின்றன. எனவே டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் நாம் பணம் செலுத்தலாம்உங்களிடம் ரொக்கமும் இல்லை கார்டும் இல்லை எனும் பட்சத்தில் பிங் உரிமையாளரிடம் பேசி UPI மூலம் பணத்தை இரண்டு முறை பிரித்து செலுத்தலாம்