நடிகை அம்பிகா: ராதா புகார் குறித்து விளக்கம்
சென்னை: நடிகை அம்பிகா, தாம் ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாகத் தமது சகோதரியும் நடிகையுமான ராதா தம்மைப் பற்றிக் கூறியுள்ள புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஏஆர்எஸ் கார்டன் பங்குகள் தொடர்பான நிதி விவகாரத்தில் இருவருக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரச்சினைக்குத் தீர்வாக ஐந்து காசோலைகளை ராதா தம்மிடம் வழங்கியதாக அம்பிகா தெரிவித்துள்ளார்.
எனினும், வங்கியில் போதிய பணம் இல்லாததால் அந்தக் காசோலைகள் திரும்பியதால் ராதா மீது சட்டப்பூர்வமாய்க் காசோலை மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த மோசடி வழக்கில் இருந்து தப்புவதற்காகவே, தம்மீது ரூ.46 கோடி மோசடிப் புகார் என ராதா முன்கூட்டியே காவல் நிலையத்தில் ஒரு பொய்யான புகாரை அளித்துள்ளதாக அம்பிகா குற்றஞ்சாட்டியுள்ளார்.
திரைத்துறையில் பிரபலமாக திகழ்ந்த இரு சகோதரிகளிடையே ஏற்பட்டுள்ள இந்தப் பல கோடி ரூபாய் பணத் தகராறு தற்போது சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.