📅 Wednesday, 21 October 2026 IST | ஐப்பசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news August 17, 2026 09:04 PM

நீ உன் வேலையை பாரு.. அனுபமா பரமேஸ்வரனிடம் அப்படி சொன்னாரா துருவ் விக்ரம்?.. அதிர்ச்சி தரும் வீடியோ

நீ உன் வேலையை பாரு.. அனுபமா பரமேஸ்வரனிடம் அப்படி சொன்னாரா துருவ் விக்ரம்?.. அதிர்ச்சி தரும் வீடியோ

சென்னை: அனுபமா பரமேஸ்வரன் சில நாட்களுக்கு முன்பு கொடுத்திருந்த ஒரு பேட்டியில் தன்னுடைய காதலர் தன்னிடம் நடந்துகொண்டது விதம் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அந்தக் காதலர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம்தான் என்று சொல்ல தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் இரண்டு பேர் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி அதிர்ச்சியளித்திருக்கிறது.

மலையாள திரையுலகத்தில் பிஸியாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி,டிராகன்,பைசன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மூன்று படங்களில் இரண்டு திரைப்படங்கள் மெகா ஹிட்டாகிவிட்டன. பைசன் படத்தில் நடித்தபோது துருவ் விக்ரமுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்கிறார்கள் என்றும்; இரண்டு பேருக்கும் மிக விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

அனுபமா பேட்டி: சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு சோகமான போஸ்ட்டை இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தார். அதனையடுத்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார் அனுபமா. அந்தப் பேட்டியில் அவர், "என்னுடைய பழைய உறவில் நான் இரண்டு ஆண்டுகள் மனரீதியாக பல கொடுமைகளுக்கு ஆளானேன். அந்தக் காலகட்டத்தில்தான் உடலளவிலும் பாதிக்கப்பட்டேன். உடல் எடையை எல்லாம் குறைத்தேன். எனது இன்ஸ்டா போஸ்ட்டுக்கு பின்னால் இரண்டு ஆண்டு வலியும்,போராட்டமும் இருக்கிறது.

போட்டுடைத்த அனுபமா: நான் காதலித்த நபர் ஒருநாள் அந்நியனாகவும், ஒருநாள் ரெமோவாகவும், ஒருநாள் அம்பியாகவும் இருப்பார். காதலிக்க தொடங்கிய மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் செய்ய சொன்னார்கள். நான் நிறுத்திவிட்டேன். என்னை மொத்தமாக அந்த நபர் கட்டுப்படுத்த பார்த்தார்.திடீரென்று அவரே பிரேக் அப் செய்துகொள்வோம் என சொல்வார். இரண்டு நாட்கள் பேசமாட்டார். நான் அதை நினைத்து வருத்தத்தில் இருப்பேன். 3வது நாள் வந்து மன்னிப்பு கேட்பார்.

முடிவு செய்தேன்: இப்படியேதான் சில நாட்கள் போனது. அந்த சமயத்தில் பிரச்னை இரண்டு பேரின் பெற்றோரிடமும் போனது. அவர்கள் வந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவரது உண்மையான முகத்திரை கிழிந்தது. இனிமேல் இவருடன் ஒத்து வராது நிரந்தரமாக பிரிந்துவிடலாம் என்று அப்போதுதான் முடிவு செய்தேன். நான் அவரிடம் என்னுடைய ஆரம்ப கால கஷ்டங்களை எல்லாம் சொல்லியிருந்தேன். ஒருகட்டத்தில் அவர் அதை வைத்தே பிளாக் மெயில் செய்ய ஆரம்பித்தார்" என்று சொல்லி குண்டை தூக்கி போட்டிருந்தார். அவரது இந்தப் பேட்டி மலையாளம், தமிழ் ஆகிய இரண்டு திரையுலகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

யார் அந்த காதலர்?: தனது முன்னாள் காதலர் குறித்து ஓபனாக பேசியிருந்தாலும் அவரது பெயரை சொல்லவில்லை அனுபமா. ஆனால் அவர் சொன்னது விக்ரமின் மகன் துருவ் விக்ரமைத்தான் என்று திரைத்துறையிலும், பத்திரிகை உலகத்திலும், சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டது. துருவ் விக்ரமோ இடையே விரக்தியாக நடப்பது போன்ற வீடியோவை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்திருந்தார்.

ட்ரெண்டாகும் வீடியோ: அதை பார்த்த ரசிகர்களோ, இந்த நேரத்தில் துருவ் ஏன் இப்படி ஒரு வீடியோவை வைக்க வேண்டும்; கண்டிப்பாக அனுபமா விஷயத்தில் துருவ் விக்ரம்தான் இருக்கிறார் போல என உறுதி செய்துகொண்டார்கள். இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

அதாவது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் துருவ்வும், அனுபமாவும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அனுபமா ஏதோ துருவ்வின் காதில் சொல்ல; அவரும் ஏதோ சொல்கிறார். ஆனால் அந்த வீடியோவில் அவர் சொல்லும் வார்த்தை, 'நீ உன் வேலையை பாரு' என்பது போல் வாய் அசைவு இருக்கிறது. அப்படி சொன்னது மட்டுமின்றி அதை சொல்லிவிட்டு சிரித்ததை பார்த்த நெட்டிசன்கள் என்ன இவர் இப்படி இருந்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.