என்கிட்ட மேட்டர் வீடியோவும் இல்ல.. ஆதாரமும் இல்ல.. வாகிதா வெளியிட்ட அடுத்த அதிரடி!
சென்னை: பிக் பாஸ் முத்துக்குமார் மற்றும் வாகிதா இடையேயான காதல் விவகாரம், நாளுக்கு நாள் புதுப்புது திருப்பங்களுடன் சோசியல் மீடியாவில் அனலை கிளப்பி வருகிறது. முத்துக்குமார் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னுடன் உறவு வைத்துக்கொள்டு ஏமாற்றிவிட்டதாக வாகிதா குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டதோடு தற்கொலைக்கும் முயற்சி செய்தார். இதையடுத்து முத்துக்குமரன், நானும் வாகிதாவும் நண்பர்கள் விளையாட்டாக பேசியதை வாகிதா எடிட் செய்து வீடியோ வெளியிட்டுவிட்டார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வாகிதா மீது புகார் அளித்துள்ளார்.
வாஹிதா வீடியோ: இந்நிலையில்தான், இந்த விவகாரம் குறித்து வாகிதா மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், முத்துக்குமரன் மீது ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை என பலர் கேட்கிறீர்கள். முத்துக்குமரன் மீது புகார் கொடுத்து அவரை ஜெயிலுக்கு அனுப்புவது என் நோக்கம் இல்லை. அவரு என் கூட நேர்ல பேசி, மனசு விட்டு உண்மைய சொல்லி, பிரச்சனையை சமாதானமா முடிப்பாருனுதான் எதிர்பார்த்தேன். ஆனா அவரு அப்படி பண்ணாம, என்னை பத்தின பேட் கமெண்ட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தப்பிச்சு ஓட பாக்குறாரு. அவர் என் கூட நேர்ல பேசும்போதுதான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேனு வாக்குறுதி கொடுத்தாரு. என்கிட்ட அதை நிரூபிக்க மெசேஜோ, வீடியோ ஆதாரம் எதுவும் இல்லை.
எல்லாம் பணத்திற்காக: அப்படி இருக்கும்போது நான் எப்படி போலீஸ்ல போய் கேஸ் கொடுக்க முடியும்? அதோட, கேஸ் நடத்த எவ்வளவு பணம் வேணும்னு எனக்கு தெரியும். அவருகிட்ட வேணா பணம் இருக்கலாம். ஆனா என் நிலைமை அப்படி இல்லை. நான் தற்கொலை முயற்சி பண்ணப்போ என் பி.எஃப் பணத்துல இருந்து ரூ.30,000 எடுத்துதான் ஹாஸ்பிடல் செலவுக்கே கொடுத்தேன். நான் பணத்துக்காக அவரு கூட பழகினேன்னு சிலர் சொல்றாங்க. பணத்திற்காக பழகுறவ நான் இல்ல, அன்னைக்கு த்துக்குமார் வீட்ல நான் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு கூட நான் தான் பணம் கொடுத்தேன். அடுத்தவங்க பணத்துல சாப்பிடுற பழக்கம் எனக்கு கிடையாது.
மேட்டர் வீடியோ இல்ல: மேலும் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் அதிகரிப்பதற்காகங்ததான் இப்படி ஒரு பிரச்சனை என்றும், இந்த பிரச்சனைக்கு அப்புறம்தான் எனக்கு ஃபாலோயர்ஸ் வந்தாங்கனு சொல்றதும் பொய். 3 வருஷமா இன்ஸ்டாகிராம் வச்சிருக்கேன், எனக்கு ஏற்கெனவே 2.5 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தாங்க. முத்துக்குமார் விவகாரத்துக்கு அப்புறம் புதுசா வந்த ஃபாலோயர்ஸ் யாருமே எனக்கு தேவையில்லை. பிடிச்சவங்க இருங்க, பிடிக்காதவங்க அன்ஃபாலோ பண்ணிட்டு போங்க. நீங்க என்கிட்ட எதிர்பார்க்கிற மாதிரி எந்த மேட்டர் வீடியோ எதுவும் என்னிடம் இல்லை. இப்போ நான் மிகுந்த மன வேதனையில் இருக்கேன் வேண்டும் என்றால் சோகமான போஸ்ட் வேணும்னா போடுவேன் என தனது வாகிதா இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.