📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 18, 2026 12:33 AM

நீ எப்படி விளையாடினாலும், அணியில் இடம் உண்டு என பயிற்சியாளர் உறுதியளித்தார்! அபிஷேக் சர்மா ஓபன் டாக்

நீ எப்படி விளையாடினாலும், அணியில் இடம் உண்டு என பயிற்சியாளர் உறுதியளித்தார்! அபிஷேக் சர்மா ஓபன் டாக்

நீ எப்படி விளையாடினாலும், அணியில் இடம் உண்டு என பயிற்சியாளர் உறுதியளித்தார்! அபிஷேக் சர்மா ஓபன் டாக்

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. இது குறித்து பேசிய அபிஷேக் சர்மா, "கடந்த இரண்டு ஆண்டுகளாக அணி பின்பற்றி வரும் அதிரடி ஆட்ட முறை குறித்தும், பேட்டிங் வரிசையின் அணுகுமுறை குறித்தும் பலமுறை பேசி இருக்கிறோம். உலககோப்பை தொடரிலும் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினோம்."

"ஒன்று அல்லது இரண்டு தொடர்களில் ஏற்படும் சரிவுகள் பேட்டிங் வரிசையின் தரத்தைத் தீர்மானிக்காது விளையாட்டில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது சகஜம். ஆனால், டிரஸ்ஸிங் ரூமில் உள்ள சூழலும், நாம் அனைவரும் அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதும் தான் முக்கியம். இத்தகைய தருணங்களில் நாம் ஒரு குழுவாக ஒன்றிணைந்து, அடுத்த போட்டியில் கவனம் செலுத்தி ஆதிக்கம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

போட்டிகளில் பெரிய ஸ்கோர்களை எட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் யாருக்கு எதிராக விளையாடப் போகிறேன், எதிரணியின் பந்துவீச்சாளர்கள் யார் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். பவர்பிளே ஓவர்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது, பவர்பிளேயில் யார் பந்துவீசப் போகிறார்கள், மற்றும் 7, 8-வது ஓவர்களில் யார் பந்துவீசுவார்கள் என்பது குறித்த தெளிவான திட்டமிடல் என்னிடம் உள்ளது" என்று விளக்கினார்.

"நாம் விரும்பும் வகையில் விளையாட வேண்டுமெனில், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நம் பக்கமே இருக்க வேண்டும். அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டனிடம் இருந்து அந்தப் பாதுகாப்பு உணர்வும் , ஆதரவும் கிடைக்க வேண்டும். அவர்களின் ஆதரவு காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக எங்களால் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட முடிகிறது, வரும் நாட்களிலும் இதைத் தொடருவோம் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

"பந்தைக் கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்ப விளையாடுவதே எனது எளிய வழிமுறை. களமிறங்கி எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறேன். பந்தை வலுக்கட்டாயமாக அடிக்க முயற்சிப்பதில்லை. வரும் போட்டிகளிலும் இதே மிக எளிமையான அணுகுமுறையைத் தான் பின்பற்ற உள்ளேன்" என்றார்.

"ஒவ்வொரு முறையும் நாம் மிகச் சிறப்பாகச் செயல்படுவோம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் மற்றும் பவர்பிளே ஓவர்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தை எங்கள் அணியில் உருவாக்கி வருகிறோம். அது தற்போது மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது" என்று அபிஷேக் சர்மா கூறினார்.