நான் தான் கொலை செய்தேன்.. பேரனுக்காக சிறை சென்ற பாட்டி..கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் கற்பகம் கொலை வழக்கில் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்கின்றனர். இந்த விஷயம் தெரிந்த ரேவதி, ராஜராஜன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்து வழக்கறிஞரை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து இருக்கிறோம், நீதிமன்றத்தில் சந்தித்துதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும், தன்னால் இப்போது எதுவும் செய்ய முடியாது என்றும் கூறுகிறார்.
இதையடுத்து ரேவதி வீட்டிற்கு திரும்பி வர, அப்போது சந்திரகலா, பாத்தீங்களா, அந்த கொலைகாரனை போய் பார்த்துட்டு வராங்க என்று கூற, ரேவதி கடும் ஆத்திரம் அடைகிறார். அவர் கொலைகாரன் கிடையாது. எதுவுமே தெரியாமல் பேசாதீங்க. போலீசார் அவரை சந்தேகத்தின் பேரில்தான் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றார்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சிறையில் அடைக்க ரேவதி, மயில்வாகனம், பாட்டி ரோகினி ஆகியோர் நேரில் சென்று சந்திக்கின்றனர். அப்போது கார்த்திகை பார்த்த ரேவதி கதறி அழுகிறாள். அவளுக்கு கார்த்திக் ஆறுதல் சொல்லி, இதுஎல்லாம் உங்க சித்தியும் அந்த சிவனாண்டியும் செய்யும் வேலை என்கிறார். இதையடுத்து, பாட்டியும் ரேவதியும் கார்த்திக்காக சமையல் செய்து கொண்டு போகின்றனர். பிறகு கார்த்திக்கை சந்தித்து சாப்பாட்டை கொடுத்து வருத்தப்பட கார்த்திக் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறான். இந்த சமயத்தில் ஏசி எஸ்டேஷனுக்கு வர இதை கவனித்த பாட்டி ஏசியை சந்தித்து அந்த கொலையை செய்தது கார்த்தி இல்லை நான்தான் என்று சொல்ல போலீஸ் கார்த்தியை விடுதலை செய்கின்றனர்.
சிறையில் பாட்டி: இதையடுத்து கார்த்திக் பாட்டியை சந்தித்து எதுக்கு பாட்டி இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்க நீ வெளில இருந்தா உண்மையை கண்டுபிடிப்ப.. கூடிய சீக்கிரம் இந்த கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து உண்மையை வெளியில் கொண்டு வர என்று சொல்கிறார். அங்கே ராஜராஜன் தனது வீட்டில் சாமுண்டீஸ்வரியிடம் கோபப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.