மழையின்றி காய்ந்த பயிர்கள்: விவசாயம் பாதிப்பால் கவலை
காரைக்குடி: கல்லல் அருகே போதிய மழை இன்றி பயிர்கள் காய்ந்து போனதோடு,காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்களால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட செவரக்கோட்டை ஊராட்சி பட்டணம்பட்டி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.இங்குள்ள பட்டணம் கண்மாய் மூலம் 200 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடந்து வந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய் துார் வரப்படாததால் கண்மாய் முழுவதும்
கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் விவசாயம் பாதிப்படைத்துள்ளது.
மழையை நம்பி விவசாயிகள் நெல் பயிரிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து காட்டுப்பன்றி, மயில்களால் விவசாயம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில்;
மழையை நம்பியே இப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. தற்போது ஆர்.என்.ஆர் நெல் பயிரிட்டுள்ளோம். உழவு உரம் விதை நெல் என ரூ. 20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். பயிர்கள் முளைத்து வரும் நிலையில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. மேலும் காட்டுப்பன்றிகள் மயில்கள் நெற்பயிர்களை வீணாக்கி வருகிறது.