📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 03, 2026 03:03 PM

முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

நெல்லை: இடைத்தேர்தலில் தோல்வி கிடைத்துவிடும் என்ற பயத்தால் பிரசாரத்தின் போது மாற்றி, மாற்றி முதல்வர் விஜய் பேசுகிறார் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

அவரது பேட்டி; மதுராந்தகம் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 39 இடங்களுக்கு முதல்வர் விஜய் சென்றுள்ளார். எதற்காக 39 இடங்களுக்கு போகிறார்.. அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஏற்கனவே வார்த்தைகளை மாற்றி மாற்றி தான் முதல்வர் விஜய் பேசிக் கொண்டு இருக்கிறார். திமுகவுக்கு பதில் தவெக என்கிறார், தவெகவுக்கு பதிலாக பாஜ என்கிறார். டில்லியில் உள்ள திமுக, தமிழகத்தின் பாஜ என்கிறார்..ஒன்றுமே புரியவில்லை.

என்ன விவரம் என்று அவர் சரியாக சொன்னால் நன்றாக இருக்கும். ஏற்கனவே அவர் சட்டசபையில் சரியாக பேசுவது இல்லை. டிராக்டர் ஓட்டுவதை டிவியில் பார்த்தேன். மேல்மட்டத்தில் இருந்து வந்தவர். மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு டிராக்டர் ஓட்டுகிறார். டீயும் குடிக்கிறார், இதை எல்லாம் ஏஐ-யில் போடமுடியவில்லை... காரணம் எல்லாரும் டிவியில் பார்த்துவிட்டனர். தவெக என்பது ஒரு நீர்க்குமிழி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்