📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 03, 2026 11:01 PM

முதலமைச்சர் விஜயை பாராட்டிய அஜித்

முதலமைச்சர் விஜயை பாராட்டிய அஜித்

முதலமைச்சர் விஜயை பாராட்டிய அஜித்

மோட்டார்ஸ் போர்ட்டில் நேரடியாக பயணித்து வரும் அஜித், தமிழ்நாட்டில் மோட்டார்ஸ் போர்ட்ஸுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் எடுத்துள்ள முன்னெடுப்பை மனதாரப் பாராட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முன்னெடுப்பு குறித்து 'இந்தியா டுடே' நாளிதழுக்கு சூப்பர் ஸ்டார் அஜித் அளித்துள்ள பேட்டியில், "விளையாட்டுத்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் முன்னெடுப்புகளை அறிவித்துள்ளது. மோட்டார் பந்தயம் உள்ளிட்ட ஒவ்வொரு விளையாட்டு துறைக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் திட்டங்களை அறிவித்துள்ள தமிழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றி.

தற்போது மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ள நான், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் ஒரு மேற்கோளை மீண்டும் கூற விரும்புகிறேன். 'தமிழக அரசின் ஒரு சிறிய அடி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஒரு பெரும் பாய்ச்சல்!' முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்." எனக் கூறியுள்ளார்.