📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 04, 2026 12:05 AM

சுரங்கச் சாலையைப் பாரந்தூக்கியால் சேதப்படுத்திய ஓட்டுநருக்குச் சிறை

சுரங்கச் சாலையைப் பாரந்தூக்கியால் சேதப்படுத்திய ஓட்டுநருக்குச் சிறை

மத்திய விரைவுச் சாலையில் (சிடிஇ) 2024ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, தமது லாரியை ஓட்டிச்சென்ற ஆடவர் அதில் பொறுத்தப்பட்டிருந்த பாரந்தூக்கி, உயர எழுப்பப்பட்ட நிலையில் இருந்ததை உணரவில்லை.

அந்நிலையில் வாகனம் சுரங்கத்துக்குள் நுழைந்ததால் மேற்கூரையும் இதர உள்கட்டமைப்பும் சேதமடைந்தன. அதன் மதிப்பு $1.4 மில்லியனுக்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே அந்த விரைவுச் சாலை 10 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்துக்கு மூடப்பட வேண்டியிருந்தது. அதனால் பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

மேலும் தொடர்ந்து நான்கு இரவுகள் அந்தச் சுரங்கப்பாதை மூடப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடந்தன.

லாய் டாவ் ஹொங் என்ற அந்த 56 வயது ஓட்டுநர் கனரக வாகனத்தைக் கொண்டு அரசாங்கச் சொத்தை சேதப்படுத்தியது, காவல்துறை அல்லது துணைக் காவல்துறை (சிஸ்கோ) அதிகாரிகளின் வழித்துணை இன்றி 4.5 மீட்டருக்கும் உயரமான வாகனத்தை ஓட்டியது ஆகிய இரண்டு குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு திங்கட்கிழமையன்று (ஜூலை 13), 13 மாதங்கள் சிறையும் $1,000 அபராதமும் தண்டனையாக வழங்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலை ஆனதும் இரண்டு ஆண்டுகள் எவ்வித வாகனத்தையும் ஓட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.