📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 23, 2026 06:04 AM

முதலமைச்சர் விஜய் மகனுக்கு இப்படியொரு பிரச்னை இருக்கா?.. ஓபனாக போட்டுடைத்த அன்புதாசன்!

முதலமைச்சர் விஜய் மகனுக்கு இப்படியொரு பிரச்னை இருக்கா?.. ஓபனாக போட்டுடைத்த அன்புதாசன்!

சென்னை: "எங்கப்பா சிஎம் விஜய்க்கு நன்றி" என கடந்த வாரம் நடந்த சிக்மா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜேசன் சஞ்சய் பேசிய பேச்சுக்கள் இன்ஸ்டாகிராம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது. சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் என்பது போல சிஎம் விஜய் மற்றும் அஜித் குமார் இருவரது சந்திப்பு லண்டனில் தரமாக நடந்தது.

இன்னொரு பக்கம் தங்களது 20வது திருமண நாளை முன்னிட்டு மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துக் கொண்டு வாக்குறுதிகளை கொடுத்து ஆயுள் வரை ஒன்றாக வாழ ஸ்காட்லாந்துக்கு சென்று ஒரு அரண்மனையையே வாடகை எடுத்து சூர்யா - ஜோதிகா நடத்திய கிறிஸ்தவ முறையிலான திருமணக் கொண்டாட்டங்கள் ரசிகர்களையும் பிரபலங்களையும் அட போட வைத்தது.

சூரியின் மண்டாடி 100 கோடி வெற்றி, விஜய் சேதுபதி - அட்லியின் பத்தா பேச்சு, ஜெயிலர் 2 கேரக்டர்கள் அறிமுகம் என செப்டம்பர் மாதம் சினிமா ரசிகர்களுக்கான மெகா விருந்து மாதமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில், சிக்மா படத்தில் நடித்துள்ள நடிகர் அன்புதாசன் ஜேசன் சஞ்சய் பற்றி சொன்ன ஒரு சீக்ரெட்டான விஷயம் தற்போது தீயாக பரவி வருகிறது.

கோலமாவு கோகிலா டு சிக்மா: ஸ்மைல் சேட்டை யூடியூப் சேனலில் விக்னேஷ் காந்த் டீமில் இருந்தவர் தான் அன்புதாசன். கோலமாவு கோகிலா, ஜோ, மீசையை முறுக்கு, ஓ மணப்பெண்ணே, ஜாம்பி, அமரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அன்புதாசன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா படத்திலும் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜேசன் சஞ்சய்க்கும் தனக்கும் இருக்கும் ஒரு பிரச்னை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஜேசன் சஞ்சய்க்கு இருக்கும் பிரச்னை: முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி சிக்மா திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. அந்த படத்துக்கான அனைத்து புரமோஷன் வேலைகளையும் தீவிரமாக செய்து வருகிறது படக்குழு. இந்நிலையில், அன்புதாசன் அளித்த பேட்டியில், பொதுவாக தனக்கு கை வியர்த்து ஈரம் ஆகும் பிரச்னை உள்ளது. அதனால், யாரை பார்த்தாலும், கை கொடுக்க மாட்டேன். வணக்கம் மட்டுமே வைப்பேன். ஜேசன் சஞ்சய்யை மீட் பண்ணும் போது அவர் ஹாய் பிரதர் என கை கொடுத்தார். நானும் மறுக்க முடியாமல் கை கொடுத்தேன். உடனடியாக அவரது கையும் ஈரமாக இருந்ததை அறிந்து, உங்களுக்கும் இந்த பிரச்னை இருக்கா என்று கேட்டேன். அப்படிதான் எங்களுடைய முதல் மீட்டிங் மற்றும் கான்வர்சேஷன் அமைந்தது.

ட்ரீட்மெண்ட் எல்லாம் செட் ஆகல: அவரு இதற்காக என்ன பண்ணீங்க என்று கேட்டார். அதெல்லாம் ஒன்றும் பண்ணல ப்ரோ, ஏதாவது ட்ரீட்மெண்ட் எடுத்தாலும், செட்டாகல என்றேன். பதிலுக்கு நான் அவரை திரும்ப கேட்டேன், அக்குபஞ்சர் எல்லாம் ட்ரை பண்ணேன் எதுவும் ஒர்க்கவுட் ஆகல என்று சிரித்துக் கொண்டே கூறினார் என்றார். Palmar Hyperhidrosis என இந்த நோயை அழைக்கின்றனர். இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் சரியான Dermatologist மருத்துவரை அணுகினால் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர். சிக்மா திரைப்படத்தில் அன்புதாசனின் காமெடி காட்சிகள் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.