📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 28, 2026 11:03 AM

முதியோரிடம் இதயப் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிய உதவும் எளிய பரிசோதனை

முதியோரிடம் இதயப் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிய உதவும் எளிய பரிசோதனை

ஒரு முதியவரின் இதயம் எவ்வளவு வேமாக மூப்படைகிறது என்பதை ஓர் எளிய பரிசோதனைமூலம் மருத்துவர்கள் கணிக்க முடியும். இதற்காகக் கையடக்கச் சாதனம் ஒன்று பயன்படுத்தப்படுகிறது.

சிங்கப்பூர் தேசிய இதய சிகிச்சை நிலையத்தின் அண்மைய ஆய்வின்படி, ஆரோக்கியமான முதியவர்களிடம் இதயத்தின் மேல் இடது அறையில் (இடது ஏட்ரியம்) ஏற்படும் ஆரம்பகால, மறைமுகப் பாதிப்பை அச்சோதனையில் கண்டுபிடிக்க முடியும்.

இந்தக் கண்டுபிடிப்பு ஆரம்பகால இதய நோய்களைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனை முறையில் மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, உடல் முழுவதற்கும் ரத்தத்தை செலுத்தும் கீழ் இடது பக்க இதய அறையை (வென்ட்ரிக்கல்) மருத்துவர்கள் சோதிப்பது வழக்கம். இருப்பினும், இடது இதய அறையின் பாதிப்புகள் தென்படும் வரை காத்திருப்பது பெரும்பாலும் மிகவும் தாமதமாகிவிடும் என்று நிலையத்தின் மூத்த மருத்துவ ஆலோசகர் ஏஞ்சலா கோ கூறினார்.

“இதய நோய்களைக் கையாள்வதைப் பற்றி நாம் பேசும்போது, பெரும்பாலான பிரச்சினைகள் இடது இதய கீழ் அறைகளிலேயே ஏற்படுகின்றன,” என்று மூத்த ஆலோசகரான கோ மேலும் தெரிவித்தார்.

இதயத்தின் இடது பகுதி, உடல் முழுவதற்கும் உயிர்வாயு நிறைந்த ரத்தத்தைச் செலுத்துவதால், அது அதிக அழுத்தம், செயல்படும் சுமையைக் கையாள்கிறது. இதனால் அது வலது பகுதியைவிட அதிகமாக உழைப்பதால் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிறது.

ஆனால் அறிகுறிகள் தென்படும்போது, நோயாளிகள் இதயச் செயலிழப்பு, சீரற்ற இதயத் துடிப்பு அல்லது கடுமையான தசைப் பாதிப்புகளுடன் வருவார்கள் என்றார் அவர்.

செப்டம்பர் 2014 முதல் டிசம்பர் 2017 வரை முதியவர்களின் இதய ஆரோக்கியம், தாக்கங்களை ஆராய்ந்த ‘இதய முதுமை ஆய்வில்’ பங்கேற்ற 255 பேரை மருத்துவர் ஏஞ்சலா கோவும் தேசிய இதய சிகிச்சை நிலைய ஆய்வாளர்களும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஏறக்குறைய 71 வயதான அந்தப் பங்கேற்பாளர்களுக்கு இதயச் சிக்கல்களோ, பக்கவாதமோ அல்லது புற்றுநோயோ இல்லை. அவர்களுக்கு ஒரே நாளில் எம்ஆர்ஐ பரிசோதனை, மருத்துவத் தரவு, எலும்புத் தசை மதிப்பீடு ஆகியவை செய்யப்பட்டன. இதில் பங்கேற்றவர்களில் 44 விழுக்காட்டினர் பெண்கள்.

இடது வென்ட்ரிக்கல் செயலிழப்பதற்கு மிக நீண்டகாலத்திற்கு முன்பே, இடது ஏட்ரியத்தில் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் தென்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டது.