📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 27, 2026 02:00 PM

Hardest Languages To Learn: உலகின் கடினமான மொழிகள் இவைதான்! தமிழும் இந்த பட்டியலில் இருக்கு

Hardest Languages To Learn: உலகின் கடினமான மொழிகள் இவைதான்! தமிழும் இந்த பட்டியலில் இருக்கு

Hardest Languages To Learn: உலகின் கடினமான மொழிகள் இவைதான்! தமிழும் இந்த பட்டியலில் இருக்கு

Hardest Languages To Learn: உலகத்துல ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், சில மொழிகளை கத்துக்கிறது ரொம்பவே கஷ்டம். இலக்கணம், உச்சரிப்பு, கலாச்சார வித்தியாசங்கள்னு கத்துக்கவே சவாலா இருக்குற அந்த டாப் 10 மொழிகள் என்னென்னனு தெரியுமா? பார்க்கலாம் வாங்க.

புதுசா ஒரு மொழி கத்துக்கிறது எப்பவுமே செம த்ரில்லான அனுபவம் தான். ஆனா, சில மொழிகளை நாம நினைக்கிற மாதிரி ஈஸியா கத்துக்க முடியாது. குறிப்பா, ஆங்கிலம் பேசுறவங்களுக்கு இது ரொம்பவே சவால். கஷ்டமான இலக்கணம், வித்தியாசமான எழுத்துக்கள், உச்சரிப்புனு இந்த மொழிகள் நம்மள ரொம்பவே குழப்பிடும். அப்படி உலகத்துலயே கத்துக்க ரொம்ப கஷ்டமான டாப் 10 மொழிகள் என்னென்னனு இப்போ பார்க்கலாம்.

மாண்டரின் சீனம் மற்றும் அரபு

மாண்டரின் ஒரு டோனல் மொழி. நாம உச்சரிக்கிற விதத்தை பொறுத்து ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் வரும். ஆயிரக்கணக்கான எழுத்துக்கள், கஷ்டமான பழமொழிகள் இருக்கிறதால இதை கத்துக்கிறது ரொம்ப சிரமம். அரபு மொழியை வலதுல இருந்து இடது பக்கமா எழுதுவாங்க. இடத்துக்கு ஏத்த மாதிரி எழுத்துக்களோட வடிவம் மாறும். இதுல மாடர்ன் ஸ்டாண்டர்ட் அரபு கத்துக்கிறது இன்னும் பெரிய சவால்.

ஜப்பானிய மற்றும் ஹங்கேரியன்

ஜப்பானிய மொழியில ஹிரகானா, கட்டகானா, காஞ்சினு மூணு வகையான எழுத்து முறைகள் இருக்கு. இதை ஞாபகம் வெச்சுக்கவே ரொம்ப நாளாகும். இதோட இலக்கணம், மரியாதையான வார்த்தைகள் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். ஹங்கேரியன் மொழி வார்த்தை வரிசையை நம்பி இருக்காது. இது கேஸ் சஃபிக்ஸ் (case suffixes) முறையை தான் பின்பற்றும். வித்தியாசமான சத்தங்கள், நிறைய உயிரெழுத்துக்கள் இந்த மொழியை கஷ்டமாக்குது.

கொரியன் மற்றும் ஃபின்னிஷ்

கொரியன் மொழி சப்ஜெக்ட்-ஆப்ஜெக்ட்-வெர்ப்ங்குற வித்தியாசமான வாக்கிய அமைப்பை வெச்சிருக்கு. இது வேற எந்த மொழி குடும்பத்தோடவும் சேராத ஒரு தனி மொழி. இதுல இருக்கிற மரியாதை வார்த்தைகள், ஒரே மாதிரி கேட்கிற வார்த்தைகள் நம்மள ரொம்பவே குழப்பிடும். ஃபின்னிஷ் மொழியில எதிர்காலமே (future tense) கிடையாது. ஆனா, சுமார் 15 வகையான இலக்கண விதிகள் இருக்கு. இதுல 'a', 'the' மாதிரி ஆர்ட்டிக்கிள்ஸ் வராது. இண்டோ-ஐரோப்பிய மொழிகளுக்கு இது ரொம்பவே நேர்மாறானது.

பாஸ்க் மற்றும் நவாஜோ

பாஸ்க், நவாஜோ மொழிகளை கத்துக்கிறதும் ரொம்பவே கஷ்டமான வேலை. இது மத்த மொழிகள்ல இருந்து தனித்து நிக்கிறதாலயும், ரொம்ப அரிதான வார்த்தைகள் இருக்கிறதாலயும் இதுக்குனு ஒரு தனி அடையாளம் இருக்கு. நவாஜோ மொழியில விளக்கமான வினைச்சொற்கள் (descriptive verbs) அதிகமா இருக்கும். பழங்காலத்து விதிகள் இந்த மொழியோட அமைப்புல ஒரு முக்கிய அங்கமா இருக்கு.

ஐஸ்லாண்டிக் மற்றும் போலிஷ்

ஐஸ்லாண்டிக், போலிஷ் மொழிகளும் இந்த டாப் 10 கஷ்டமான மொழிகள் லிஸ்ட்ல இருக்கு. போலிஷ் மொழியில உச்சரிப்பு ரொம்பவே ட்ரிக்கியா இருக்கும். இதோட கஷ்டமான இலக்கண முறை கத்துக்கிறவங்களுக்கு பெரிய குழப்பத்தை கொடுக்கும். ஐஸ்லாண்டிக் மொழி அதோட பழமையான வேர்களை அப்படியே பாதுகாத்துட்டு வருது. இந்த பழமையான அமைப்புகள், அரிதான வார்த்தைகளால இந்த ரெண்டு மொழிகளையும் கத்துக்கிறது பெரிய சவாலா இருக்கு.

கடினப் பிரிவில் பல இந்திய மொழிகளும் இடம்பெறுகின்றன. அமெரிக்க வெளியுறவுத் துறையின் வகைப்பாட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், உருது, சிங்களம் உள்ளிட்ட மொழிகள் மூன்றாவது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் உள்ள மொழிகள் ஆங்கிலத்திலிருந்து குறிப்பிடத்தக்க மொழியியல் அல்லது பண்பாட்டு வேறுபாடுகளைக் கொண்டவை என வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றை தொழில்முறை அளவில் கற்றுக்கொள்ள சராசரியாக 44 வாரங்கள் அல்லது சுமார் 1,100 வகுப்பு நேரங்கள் தேவைப்படலாம் என அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.