மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா: பக்தர்களுக்கு ரூ.5 கோடியில் விபத்து குழு காப்பீடு
மதுரை, செப்.10-–உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகா ப்பைக் கருத்தில்கொண்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மொத்தமாக ரூ.5 கோடியில் விபத்து குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெ றவுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழாநிகழ்வு நடைபெ றுவதால், விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. இதை யொட்டி கோயில் மேல்தளம், பொற்றாம ரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உபயதாரர்களுக்கு 4,000 பாஸ்களும், வி.ஐ.பிக்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் 5,000 பாஸ்களும் வழங்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்ப டுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கியூஆர் கோடு வசதியுடன் கூடிய ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஏழு வண்ணங்களிலான பிர த்யேக அனுமதிப் பாஸ்கள் வழங்கப்படவுள்ளன.இத்தகைய மாபெரும் விழாவில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் வகையில், கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான விபத்துக் குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.